சென்னையில் நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் பலி.. சிசிடிவியால் வெளிவந்த உண்மை.. என்ன நடந்தது?
சென்னை: பிரபல சீரியல் நடிகை ரேகா நாயரின் கார் மோதி சென்னையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். சாலையில் படுத்து கிடந்த அந்த நபரின் மார்பில் கார் ஏறி இறங்கிய நிலையில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் அன்னை சத்யா நகர் எனும் பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் மஞ்சன் (வயது 55). இவர் நேற்று மாலையில் ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள ரோட்டில் படுத்து கிடந்தார்.
இந்த வேளையில் திடீரென்று ஒரு கார் வந்தது. அப்போது ரோட்டில் படுத்து கிடந்த மஞ்சனை கார் டிரைவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கார் அவரது மார்பில் ஏறி இறங்கி சென்றுள்ளார்.

இதனால் மஞ்சன் அலறியுள்ளார். ஆனால் கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மஞ்சனை மீட்டு கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மஞ்சன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மஞ்சன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான புகாரின் கிண்டி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர். அப்போது மஞ்சன் மீது ஏறி இறங்கி சென்ற காரின் பதிவெண் கிடைத்தது.
இதையடுத்து அந்த பதிவெண்ணை அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கார் சீரியல் நடிகையான அடையாறில் வசித்து வரும் ரேகா நாயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இவர் நாயகர், வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி இருப்பது தெரியவந்தது.
அதோடு விபத்து தொடர்பாக சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான பாண்டி ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் இந்த விபத்து நடந்தபோது ரேகா நாயர் காரில் இருந்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications