சீமானுக்கு சிக்கலான "வைரம்".. அமலாக்கத்துறைக்கு பறக்கும் மெசேஜ்.. 3 நாள்தான் கெடு.. விஜயலட்சுமி செக்
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வேறு ஒரு புதிய புகாரை கொடுக்க நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி தரப்பு முடிவு செய்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக சமீபத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை விஜயலட்சுமி பேசினார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.

அவர் தனது பேட்டியில், உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.
அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோர்க்கும் தெரியும்.
சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம்.
ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவரை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம்.
அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
வீரலட்சுமி: விஜயலட்சுமி இன்று புகார் கொடுக்க சென்ற போது, அவருடன் வீரலட்சமி உடன் இருந்தார். தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி கடந்த 2021ம் ஆண்டே விஜயலட்சுமிக்கு ஆதரவாக களமிறங்கினார். இன்று போலீசில் விஜயலட்சுமி புகார் கொடுக்க சென்ற போதும் வீரலட்சுமி அவருடன் இருந்தார்.
அதன்பின் பேட்டி கொடுக்க வந்த விஜயலட்சுமியிடம் என்ன பேச வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி அவருக்கு ஆலோசனை வழங்கினார். ஒரு காலத்தில் தமிழ்நாடு அரசியலில் மிகவும் பிரபலமாகி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தார்.
முக்கியமாக ஒருவர் தனக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக வீரலட்சுமி வீடியோ வெளியிட்டார். அதில் அந்த நபருக்கு எதிராக வெளியிட்ட வீடியோவில் கையில் வீச்சரிவாளோடு நின்று மிரட்டல் விடுத்தார். முக்கியமாக அந்த நபரின் ஆண் உறுப்பை அறுப்பேன் என ஆவேசமாக பேசியிருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் போலீசார் ஆபாச படங்களை அனுப்பிய நபரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில்தான் வீரலட்சுமி கவனம் பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு கூட நடிகை விஜயலட்சுமிக்கு நீதி கோரி வீரலட்சுமி போராட்டம் செய்தார். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் வீரலட்சுமி விஜயலட்சுமிக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார்.
புதிய புகார்: இந்த நிலையில் சீமானுக்கு எதிராக வேறு ஒரு புதிய புகாரை கொடுக்க நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி தரப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வீரலட்சுமி அளித்த பேட்டியில், சீமானிடம் வைர செயின் உள்ளது. உங்களிடம் அந்த வைரம் எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியும்.
அதை எங்கே வாங்கினீர்கள். எப்போது வாங்கினீர்கள், எப்படி வாங்கினீர்கள் என்று கணக்கு காட்ட வேண்டும். அதற்கான பில்லை வெளியிடுங்கள். 3 நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு இதற்கான பல்லை வெளியிடுங்கள். நீங்கள் மாநிலம் முழுக்க கூட்டம் நடத்துவதற்கு யார் காசு கொடுத்தது. அதை சொல்லுங்கள்.
இதற்கான கணக்குகளை நீங்கள் வெளியிடவில்லை என்றால் நான் நேரடியாக சென்று அமலாக்கத்துறை, வருமான வரித்துறையிடம் உங்களை பற்றி புகார் கொடுப்பேன். உங்களுக்கு எதிராக ஆவணங்களை கொடுப்பேன் என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் இதை செய்ய வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று சீமானுக்கு எதிராக வீரலட்சுமி பேசி இருக்கிறார்.
போலீசார் விசாரணை - மாஜிஸ்திரேட் வாக்குமூலம்: இது தொடர்பாக விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி நடந்து கொண்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜயலட்சுமி மிகவும் எமோஷனலாக காணப்பட்டு உள்ளார். அடிக்கடி விசாரணையில் அழுதுள்ளார்.சீமானை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது.விசாரணையில் சில முக்கிய வீடியோக்களை விஜயலட்சுமி கொடுத்துள்ளார்.
முக்கிய போன் ரெக்கார்டுகள், மெசேஜ்கள், பணம் கொடுத்த வங்கி விவரங்களையும் விஜயலட்சுமி போலீசில் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
விஜயலட்சுமி மாஜிஸ்திரேட்: இதையடுத்து விஜயலட்சுமி மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் கொடுத்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் பதற்றத்துடன் காணப்பட்டனர். இதில் சீமான் மீது எப்ஐஆர் போடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது. அதன்பின் அவருக்கு மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு 8 முறை கரு உண்டாகி அதை கலைத்ததாக, சீமான் தனக்கு தொந்தரவு, தொல்லை, கொடுமை கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
இதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. இதையடுத்து விஜயலட்சுமி வழக்கில் நேற்று இரவு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது. நடிகை விஜயலட்சுமி வழக்கில் தனக்கு அனுப்பப்பட்டு இருக்கும் சம்மன் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது,
அதன்படி இன்று என்னால் ஆஜராக முடியாது என்று பதில் அளிக்க இருக்கிறாராம். அதோடு இல்லாமல் 12ம் தேதி ஆஜராகிறேன். 11ம் தேதி நாமக்கல்லில் வழக்கு ஒன்று உள்ளது. அங்கே செல்ல வேண்டும். அதனால் 12ம் தேதி ஆஜராகிறேன் என்று பதில் அளிக்க இருக்கிறாராம். போலீஸ் இதில் முறையாக அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஸ்டெப்புகள் சீமான் மீதான வழக்கை வலுவாக்க பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் விரைவில் அவர் மீது எப்ஐஆர் பதிய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இதனால் எங்கே சீமான் அடுத்து கைதாகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் முன்ஜாமீன் மனுவை அவர் இன்றோ அல்லது நாளையோ தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications