கட்டாயப்படுத்தி.. நிர்பந்தப்படுத்தி.. வீட்டிற்கு வந்து சீமான் "டார்ச்சர்".. விஜயலட்சுமி ஷாக் புகார்
சென்னை: நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ஷாக்கிங் ஸ்டேட்மென்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இதில் பல அதிர்ச்சி தகவல்கள் அடங்கி உள்ளன.
நடிகை விஜயலட்சுமி இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக நேற்று புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை விஜயலட்சுமி பேசினார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.

விஜயலட்சுமி, இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.
மகனாய் இருப்பேன் என்ற சீமான்: விஜயலட்சுமி தனது புகாரில், சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன், உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார். என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள 3ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் அவர்கள் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது.
மன அழுத்தம்: அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார். எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார். என் தாயாரிடமும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் அவர்கள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுவிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன்.
என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம்.
7 முறை கரு: சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன். என்னுடைய அனுமதி இல்லாமல் எம்மை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் எம்மை கட்டாயபடுத்தியும் நிர்பந்தபடுத்தி கருச்சிதைவு மாத்திரைகள் எமக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எமக்கு கருச்சிதைவு செய்தார்.
இதனால் என்னுடைய உடலும் உள்ளமும் பலவீனம் ஆனது. நலிவுற்று போனது. எங்கள் குடும்பம் இதனால் நிம்மதி இழந்தாது. நான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகைகளை பணங்களை, சுமார் 60,00,000/- லட்சம் பணமும் 35,00,000/- மதிப்பிலான நகைகளையும் சிறுக,சிறுக என்னிடம் பெற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் நான் பணம் கொடுக்க மறுக்கவே மது அருந்திவிட்டு என்னை துன்புறுத்தி அடித்துவிட்டு பணத்தை புடிங்கி செல்வார். ஒரு நாள் நான் சீமான் அவர்களுக்கு மத்திய உணவை நான் சமைத்து வளசரவாக்கம் கட்சி அலுவலகத்தில் கொண்டு செல்வேன், அவர் சாப்பிட்ட பிறகு 45 நிமிடம் வரை அவரோடு இருந்துவிட்டு மாலை வீட்டிற்கு செல்வது தினந்தோறும் பழக்கம். மேலும் சீமான் அவர்களின் Ford-காரில் பிறகு சீமானின் இதை பற்றி கேட்ட பொழுது அவர் மழுப்பலாக உண்மைக்கு மாறான தகவலை பேசினார் என்னிடம் சண்டையிட்டு அடித்தார்.
மேலும் என்னிடம் கணவராக வாழ்ந்து கொண்டே கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்ய மறைமுகமாக வேலை செய்து கொண்டார். இந்த தகவல் கயல்விழிக்கும் சீமானுக்கும் திருமணமான பிறகுதான் எமக்கே தெரிந்தது.
சீமானின் தூண்டுதலின் பேரில் மதுரை செல்வமும் எம்மை குறித்து தவறான செய்தியை சமூக வலைத்தளத்தில் வதந்தியையும் பரப்பினார். இது குறித்து அவரிடம் நான் கேட்டதற்கு என்னை whatsapp பில் தொடர்பு கொண்டு எமக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல் எம்மை குறித்து ஏதோ ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டினார்கள்.எனவே ஐயா அவர்களே என்னை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து என்னுடன் கணவராக வாழ்ந்து என் வயிற்றில் இருந்த கருவை என் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து என்னுடைய பணம் நகைகளை பறித்து என்னை இழிவாக பேசி எம்மை தற்கொலைக்கு தூண்டி என் வாழ்கையை சீரழித்த சீமான் மீதும் சீமானின் தூண்டுதலின் பேரில் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பி என்னை மிரட்டிய மதுரை செல்வம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து எனக்கு என் உடல்நிலை சரியில்லாத என் சகோதரிக்கு பாதுகாப்பு அளித்து எமக்கு நீதியும் நியாயத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று விஜயலட்சுமி கூறி உள்ளார்.
என்ன பின்னணி: நடிகை விஜயலட்சுமி.. ஒரு காலத்தில் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றார். அந்த படத்திற்கு பின் பெரிதாக இவருக்கு வாய்ப்பு வரவில்லை. அதன்பின் பல்வேறு இணை ரோல்களில் விஜயலட்சுமி நடித்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜயலட்சுமி, இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்தார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.
வீடியோ: இது தொடர்பாக பல்வேறு வீடியோக்களை அவர் வெளியிட்டு உள்ளார். அதிலும் அவர் வெளியிட்ட 3 வீடியோக்கள் மக்கள் இடையே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. முதலில் சீமானை கடுமையாக ஒருமை வார்த்தைகளில் திட்டி விமர்சனங்களை வைத்தார் விஜயலட்சுமி. அதன்பின் சீமானின் சில வீடியோக்களை வெளியிட்டது விஜயலட்சுமி தரப்பு.
அதன்பின் முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டார். கடந்த அதிமுக ஆட்சி முழுக்க விஜயலட்சுமி பெங்களூரில் இருந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி விஜயலட்சுமி ஒதுங்கி இருந்தார்.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு வர முடியாது. அவர்கள் சீமானுக்கு பாதுகாப்பு தருகிறார்கள் என்றும் கூறினார். இந்த நிலையில்தான் இன்று சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளிக்க உள்ளார்.
வீடியோ: இந்த புகார் தொடர்பாக பரபரப்பு வீடியோ ஒன்றை விஜயலட்சுமி வெளியிட்டு உள்ளார். அதில், நான் சீமானுக்கு எதிராக இன்று புகார் கொடுக்க உள்ளேன். உங்களுக்கே தெரியும் அதிமுக ஆட்சியில் அவருக்கு எதிராக நான் புகார் கொடுக்க முடியவில்லை.
என்னை துடிக்க துடிக்க தொல்லை செய்தனர். என்னை தடுத்தனர். மிரட்டினர். எனக்கு எதிராக அதிமுக அரசு உதவியுடன் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டனர். மக்கள் எல்லோருக்குமே தெரியும். அதிமுக காலத்தில் சீமான் மீது வழக்கு தொடுத்தாலும் அதிமுகவினர் சீமானை காப்பாற்றினார்கள்.
அவரை காப்பாற்றுவதற்காக என்னை துடிக்க துடிக்க வைத்தனர். எவ்வளவு புகார்களை, மிரட்டல்களை எல்லாம் தாண்டி இன்று மீண்டும் புகார் கொடுக்க உள்ளேன். எனக்கு நீதி கிடைப்பது என்பது மக்களுக்கு நீதி கிடைப்பது மாதிரி. எனக்கு ஆதரவாக இந்த ஆளும் அரசு.. ஒரு பெண்னுக்கு ஆதரவாக ஆளும் அரசு இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இன்று காலை 11 மணிக்கு நான் போலீஸ் அலுவலகம் சென்று புகார் கொடுக்க போகிறேன். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சீமான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications