சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு.. விரலுக்கும் மூக்கிற்கும் வரி! நகைச்சுவையாக பங்கம் செய்த நடிகை

Google Oneindia Tamil News

சென்னை: அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி அதிகரித்து வருவதால் விலைவாசி உயர்வும் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் சூழலில் ஜிஎஸ்டியை நகைச்சுவையாக விமர்சித்து இருக்கிறார் பிரபல நடிகை வினோதினி.

மத்திய அரசு அண்மையில் மாற்றியமைத்த ஜி.எஸ்.டி, வரி விதிப்பில் அடைக்கப்பட்ட பால், தயிர், பேக்கேஜிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி உயர்த்தப்பட்டது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இறுதிச் சடங்கு போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்றும் சுடுகாடு கட்டுவதற்கே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் கூறியதை பலரும் விமர்சித்தனர்.

ஆத்தீ! ரசம் சாதத்திற்கு ஜிஎஸ்டியுடன் ரூ 11 ஆயிரம் பில்லா?.. நடிகை வினோதினி சொல்ற கணக்கை பாருங்க! ஆத்தீ! ரசம் சாதத்திற்கு ஜிஎஸ்டியுடன் ரூ 11 ஆயிரம் பில்லா?.. நடிகை வினோதினி சொல்ற கணக்கை பாருங்க!

நடிகை வினோதினி

நடிகை வினோதினி

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வினோதினி ஜிஎஸ்டியை நகைச்சுவையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளரிடம் முதலாளி ஜிஎஸ்டி வரி கேட்பதைபோல் அவர் பேசியுள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

பாத்திரத்துக்கும் அடுப்புக்கும் ஜிஎஸ்டி

பாத்திரத்துக்கும் அடுப்புக்கும் ஜிஎஸ்டி

அவர் பேசியுள்ள வீடியோவில், "சாப்டீங்களா.. வாங்க! எப்பா பில்ல போடு, என்ன சாப்டீங்க? ரசம் சாதமா? ரசத்துத்துக்கு ஜிஎஸ்டி, சாதத்துக்கு ஜிஎஸ்டி, ரசத்துல ஊத்துல நெய்யுக்கு ஜிஎஸ்டி, நெய்யில் கலந்த டால்டாவுக்கு ஜிஎஸ்டி, அப்றம் அந்த கடுகு தாளிச்சோம்ல அதுக்கான ஜிஎஸ்டி, தாளிச்ச எண்ணைக்கு ஜிஎஸ்டி, எண்ணெயை ஊத்திய பாத்திரத்துக்கு ஜிஎஸ்டி, பாத்திரத்தை வெச்ச ஸ்டவ்வுக்கு ஜிஎஸ்டி, சிலிண்டருக்கு ஜிஎஸ்டி. போட்டு முடிச்சுட்டியா?

விரலுக்கும் ஜிஎஸ்டி

விரலுக்கும் ஜிஎஸ்டி

சார் அந்த விரலை காட்டுங்க.. 10 விரல் வெச்சிருக்காரு சாரு! 10 விரலுக்கும் ஜிஎஸ்டி போடு. ஏது உங்க விரலா? யூஸ் பண்ணிங்கள்ல. சாப்பிட வலது கை மட்டும்தான் யூஸ் பண்ணீங்களா? ஏன் இலைய அட்ஜஸ்ட் பண்ண இடது கை யூஸ் பன்னீங்கள்ல. ஏமாத்தலாம்னு பாக்குறீங்களா? அப்றம் அந்த மூக்குக்கு ஜிஎஸ்டி. உங்க சுதந்திரம்ங்குறது உங்க மூக்கோட முடிஞ்சு போச்சு. சாப்பாட்டை எடுத்து மோந்து பார்த்தீங்கள்ல. அப்றம் அந்த காத்துக்கு நாங்க ஜிஎஸ்டி போடாம இருக்கும்னு சந்தோசப்படுங்க.

கோடீஸ்வரனாக இருந்தாலே வாழ முடியும்

கோடீஸ்வரனாக இருந்தாலே வாழ முடியும்

எவ்ளோப்பா? 10,375 ரூபா 35 காசு. 11 ஆயிரம் கொடுங்க. அது அவங்க போட்ட ஜிஎஸ்டி. நாங்க போட வேணாமா? எது பணம் இல்லையா? போங்க சார்.. போயி கோடீஸ்வரனாகிட்டு வாங்க. அப்பதான் வாழ முடியும். கோடீஸ்வரனா பொறக்காதது உங்க தப்பு. எது வேலை பண்ணி கோடீஸ்வரனாக போறீங்களா? அப்பாவி." என்று கிண்டலாக கூறியுள்ளார். அடுத்து உணவக ஊழியரிடம் முதலாளி பேசுவதை போல் பேசியுள்ள வினோதினி, "போ வேலைய பாரு.. 3,000 ரூபா சம்பளம் கொடுக்குறேன் 30 நாளைக்கு. ஒழுங்கா வேலை பாரு." என்று கூறியுள்ளார்.

English summary
Actress Vinothini trolls GST tax collection in Restaurant video gone viral: அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி அதிகரித்து வருவதால் விலைவாசி உயர்வும் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் சூழலில் ஜிஎஸ்டியை நகைச்சுவையாக விமர்சித்து பிரபல நடிகை வினோதினி.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X