கொடைக்கானல் லாட்ஜில் மலர்ந்த நடிகையின் கள்ளக்காதல்.. பெற்ற அப்பான்னு கூட யோசிக்கலயா? பெரிய ட்விஸ்ட்
சென்னை: நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன் கொடைக்கானலில் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள நிலையில், இந்த கொலையின் பின்னணி குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன..
சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த சூர்ய நாராயணன்.. இவரது மகள் விஷ்ணு பிரியா.. சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை விஷ்ணு பிரியா,,

கொடைக்கானல் பங்களா
விஷ்ணு பிரியாவுக்கு, ரமேஷ் கிருஷ்ணா என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. கடந்த 2018ம் ஆண்டு தனது கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக தனது தந்தை சூர்ய நாராயணனுடன் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் உள்ள தங்களுக்கு சொந்தமான பங்களாவில் விஷ்ணு பிரியா தங்கியிருந்துள்ளார்..
அப்போது அவர்களுக்கு கார் டிரைவராக பணியாற்றிய பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்குத் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.. மகளின் இந்த நடவடிக்கையைத் அப்பா சூர்ய நாராயணன் கடுமையாகக் கண்டித்தும், அந்த எச்சரிக்கையை மீறி விஷ்ணு பிரியா ஓட்டுநருடன் பழகி வந்ததாகத் தெரிகிறது..
கார் டிரைவர் - கள்ளக்காதல்
இந்தச் சூழலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார் டிரைவர் பிரபாகரன் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.. தனது மகளின் தவறான உறவைத் தடுப்பதற்காக சூர்ய நாராயணனே கூலிப்படையை ஏவி பிரபாகரனைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்..
ஜாமீனில் வெளியே வந்த சூர்ய நாராயணன், கொடைக்கானலில் உள்ள தனது பங்களாவிலேயே தங்கியிருந்தார்.. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அந்த பங்களாவில் வேலை பார்த்து வந்த ஆறுமுகம் என்பவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.. போலீசார் விரைந்து வந்து பூட்டப்பட்டிருந்த பங்களாவை உடைத்து உள்ளே சென்றனர்..
காட்டேஜ் சம்பவம்
அப்போது ஒரு ரூமில் வேலைக்காரர்களான ஆறுமுகம் மற்றும் முரளி ஆகியோர் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னொரு ரூமில் சூர்ய நாராயணன் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு உடல் முழுவதும் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்..
கோயம்புத்தூரிலிருந்து இந்த லாட்ஜில் தங்குவதற்காக வந்த 5 பேர் கொண்ட கும்பல், எந்தவித அடையாள ஆவணங்களையும் வழங்காமல் 2 நாட்களாக அங்கேயே தங்கியிருந்து இந்தத் திட்டமிட்ட கொலையைச் செய்துள்ளதாக தெரிகிறது..
அவர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றதுடன், உயிரிழந்த சூர்ய நாராயணன் மற்றும் வேலைக்காரர்களிடம் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.. டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கவே சூர்ய நாராயணன் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக்கொலை பழிதீர்க்க நடத்தப்பட்டதா? அல்லது நகைக்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!
ஆதாரங்கள் அழிப்பு
குற்றவாளிகளை விரைந்து பிடிக்கத் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.. தலைமறைவாக உள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த அந்த ஐந்து பேர் கொண்ட கும்பலைத் தேடி அண்டை மாவட்டங்களுக்குத் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்..
கொலை செய்யப்பட்ட விதம் மற்றும் சிசிடிவி ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட பழிவாங்கும் செயலாக தெரிவதாகவும், விரைவில் அவர்களைக் கைது செய்வோம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications