Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதை" பார்த்துட்டீங்களா.. வச்சாலே போச்சு... செல்போனில்கூட இருக்கக்கூடாது.. ஏடிஜிபி ரவி வார்னிங்!

சிறார் வீடியோ போனில் வைத்திருக்ககூடாது என்று ஏடிஜிபி வார்னிங் தந்துள்ளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தால் மட்டுமில்லை.. செல்போனில் வைத்திருந்தாலே நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அது சம்பந்தமான குற்றங்கள் கடுமையாக்கப்படும் என்றும் சென்னை ஏடிஜிபி ரவி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! - வீடியோ

    பெண்கள் மற்றும் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் அதிரடியில் தமிழக போலீசார் இறங்கி உள்ளனர்.. அதனாலேயே இது சம்பந்தமான எச்சரிக்கையை பலமுறை விடுத்து வருகின்றனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    ''குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான். 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    எனினும் ஆங்காங்கே இன்னமும் இந்த குற்றம் குறையவில்லை. ஆபாச படம் பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட 12 பேரை பிடித்து கைது செய்தும்உள்ளனர்... இது தமிழகம் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இதை பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "சென்னை நகர் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் முறை தமிழகம் முழுவதும் உள்ளது.

    போக்சோ

    போக்சோ

    பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் பட்டியல், ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஆவணம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஆலோசனை மையங்கள் துவங்கப்பட உள்ளன... பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து காவல்துறை ஈடுபட்டு வருகிறது. குழந்தைகள் ஆபாச படத்தை செல்போனில் வைத்திருந்தால் குற்றம் என போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தண்டனை

    தண்டனை

    செல்போனில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை வைத்திருந்தவர்களில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆபாச படம் குற்றம் தொடர்பாக அனைத்து உயர் அதிகாரிகள், ஐஜிகளுக்கு இந்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கும் பட்சத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.... குற்றமில்லாத மாநிலமாக தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என தெரிவித்தார்.

    வரவேற்பு

    வரவேற்பு

    பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக போலீசாரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே என்றாலும், நெட்டிசன்கள் இதை பற்றி கேள்வி எழுப்பாமல் இல்லை.. "ஆபாச இணையதளத்தையே நீக்கி விடுவதை விட்டு விட்டு.. இப்படி பார்க்கிறவங்களை அரஸ்ட் பண்ணுணா எப்படி?" தெருவுல போவாங்களாம் ஆனா யாரும் பாக்ககூடாது, பாத்தா கேஸ் போடுவோம் என்பது போல் இது... இணையத்தில் உள்ள அனைத்து தேவையற்றவைகளையும் களைந்து விட்டு கைதுகளை செய்தல் நன்றாக இருக்கும்.

    நிர்பயா

    நிர்பயா

    லட்சக்கணக்கான மக்கள் ஆபாச படங்களை பார்க்கிறார்கள்... அவர்களை எல்லாம் பிடித்து போட்டோ போட்டு அவங்க குடும்பத்தை ஏன் அவமானப்படுத்தணும்? இன்னும் நிர்பயா குற்றவாளிகளுக்கே தீர்ப்பு தராதபோது, இப்படி ஆபாச படம் பார்த்தவங்களை புடிச்சி ஜெயில்ல போடறது சரியா" என்றும் இணையதள வாசிகள் கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+