நிஜ முகத்தை பார்க்காம போயிட்டேனே.. அமித் ஷா கொடுத்த அதிர்ச்சியால் உடைந்த மம்தா.. மனசே விட்டுட்டாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை பழி வாங்கிவிட்டார்கள்.. நான் ஏமாற்றம் அடைந்துவிட்டேன்.. எனக்கு துரோகம் செய்துவிட்டனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருக்கமாக பேச தொடங்கி உள்ளார். தன்னை ஒரு குடும்பம் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக மம்தா புலம்பி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப காலங்களில் இருந்து அவருடன் நெருக்கமாக அரசியல் தலைவர் சிசிர் அதிகாரி. மம்தாவின் இடதுகை போல பார்க்கப்பட்டவர்தான் சிசிர் அதிகாரி. இவருடன் இருக்கும் நட்பு காரணமாக சிசிர் அதிகாரியின் மொத்த குடும்பத்திற்கும் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இடம் கொடுத்தார்.

சிசிர் அதிகாரியின் குடும்பத்தில் மட்டும் 2 திரிணாமுல் எம்பிக்கள், ஒரு மாநில அமைச்சர், ஒரு கவுன்சிலர் என்று பலருக்கு பதவி வழங்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரசில் மம்தாவிற்கு பின் மிகப்பெரிய சக்தியாக பார்க்கப்பட்ட குடும்பம்தான் இந்த அதிகாரி குடும்பம்.

மாறிவிட்டது

மாறிவிட்டது

திரிணாமுல் காங்கிரசை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த குடும்பம்தான் அதிகாரி குடும்பம். அப்பா சிசிர் அதிகாரி, அவரின் மகன் சுவேண்டு அதிகாரி, இன்னொரு மகன் தீப்யாந்து அதிகாரி மற்றும் சவ்மெண்டு அதிகாரி என்று நான்கு அதிகாரிகளும் திரிணாமுல் காங்கிரசில் அதிக பலம் வாய்ந்தவர்கள். இதில் சிசிர் அதிகாரி, தீப்யாந்து அதிகாரி இருவரும் திரிணாமுல் எம்பிக்கள்.

திரிணாமுல்

திரிணாமுல்

சுவேண்டு அதிகாரியோ மம்தாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த திரிணாமுல் அமைச்சர். கடந்த டிசம்பரில் பாஜக தலைவர்களை சந்தித்த சுவேண்டு அதிகாரி பாஜகவில் இணைந்தார். தற்போது இவர் பாஜக சார்பாக நந்திகிராமில் மம்தாவிற்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவில் இணைந்த பின் வரிசையாக அதிகாரி குடும்பத்தினர் திரிணாமுல் கட்சிக்கு டாட்டா காட்டிவிட்டு பாஜகவில் ஐக்கியம் ஆனார்கள்.

பாஜக

பாஜக

சுவேண்டு பாஜகவில் இணைந்து சில நிமிடங்களில் அவரின் தம்பி சவ்மெண்டு அதிகாரியும் பாஜகவில் சேர்ந்தார். இதையடுத்து நேற்று சிசிர் அதிகாரி, தீப்யாந்து அதிகாரி இரண்டு பேரும் பாஜகவில் இணைந்தனர். இதனால் மொத்த அதிகாரி குடும்பமும் பாஜகவிற்கு தற்போது தாவி உள்ளது. மம்தா அதிகம் நம்பிய அதிகாரி குடும்பத்தினரை அமித் ஷா தட்டி தூக்கி உள்ளார்.

மம்தா

மம்தா

இந்த அடுத்தடுத்த அதிர்ச்சி காரணமாக மம்தா பானர்ஜி தற்போது கலக்கத்தில் இருக்கிறார். இதனால்தான் தன்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டனர் என்று மம்தா கூறியுள்ளார். மம்தா நேற்று அளித்த பேட்டியில், சிசிர் அதிகாரியையும், அவரின் மகன்களையும் நான் அதிகம் நம்பினேன். அவர்களை அதிகம் மதித்தேன். அன்பு காட்டினேன். இந்த அடுத்தடுத்த அதிர்ச்சி காரணமாக மம்தா பானர்ஜி தற்போது கலக்கத்தில் இருக்கிறார். இதனால்தான் தன்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டனர் என்று மம்தா கூறியுள்ளார். மம்தா நேற்று அளித்த பேட்டியில், சிசிர் அதிகாரியையும், அவரின் மகன்களையும் நான் அதிகம் நம்பினேன். அவர்களை அதிகம் மதித்தேன். அன்பு காட்டினேன்.

போச்சு

போச்சு

அவர்களின் வீட்டிற்கு கையால் வரைந்த கடவுள் படம் கொடுத்தேன். என் குடும்பம் போல பார்த்தேன். ஆனால் அவர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். என்னை ஏமாற்றிவிட்டு அங்கே சென்றுவிட்டனர்.அதிலும் 2014ல் இருந்தே பாஜகவுடன் தொடர்பில் இருந்தேன் என்று அதிகாரி கூறியுள்ளார். அப்படி என்றால் அவர்கள் எவ்வளவு மோசமான ஏமாற்று குடும்பமாக இருந்திருப்பார்கள்.

துரோகம்

துரோகம்

இவர்களின் நிஜ முகத்தை பார்க்காமல் போய்விட்டேன். இதை விட எனக்கு பெரிய ஏமாற்றம் இல்லை. இவர்கள் என்னுடைய கட்சியில் இருந்து வெளியேறியதே சந்தோசம். இவர்கள் எல்லாம் என்னுடன் இருக்க வேண்டாம். உண்மையான தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு போதும், என்று மம்தா பானர்ஜி மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+