தேமுதிகவினருக்கு இனி தீபாவளி; அதிமுக- பாஜக கூட்டணிக்கு டெபாசிட் கிடைக்காது: சுதீஷ்
சென்னை: அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் கட்சியினருக்கு இனி தீபாவளிதான்; இந்த தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு டெபாசிட் கிடைக்காது என தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அதிமுக அணியில் முதலில் 41 தொகுதிகளை கேட்டது தேமுதிக. ஆனால் இதற்கான வாய்ப்புகளே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது அதிமுக.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே சசிகலாவை ஆதரித்தது தேமுதிக. இருந்தபோதும் அதிமுகவும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியதைவிட கூடுதல் இடங்களைக் கேட்டது தேமுதிக. ஆனால் தேமுதிகவுக்கு அதிகபட்சம் 13 அல்லது 15 என்கிற நிலையில்தான் இருந்தது அதிமுக.
இதனால் கடுப்பாகிப் போன தேமுதிக இன்று அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தே விலகுவதாக அறிவித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ், தேமுதிகவினருக்கு இனி தான் தீபாவளி. இந்த தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும்.
அதிமுகவில் கேபி முனுசாமி, பாமகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் ஸ்லீப்பர் செல்லாகவும் செயல்படுகிறார் என்றார். அத்துடன் தேமுதிக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்களையும் எழுப்பினர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications