கடல் வத்தி கருவாடு திங்க நினைச்ச கொக்கு குடல் வத்தி செத்து போச்சாம்.. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதில்
சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என அண்ணாமலை பேசியதை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்ததாம்" என கிண்டலாக கூறியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். பாஜக ஆட்சிக்கு வரும் நாள் இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள். இது பாஜகவின் சூளுரை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாள், முதல் நொடியில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்றவரின் சிலை, கொடிக்கம்பம் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார் அண்ணாமலை.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "தலைவர்களின் புகழை போற்றுவது தான் மாண்பும், மரியாதையும். தலைவர்களின் புகழை சிதைக்கும் வகையில் எந்தவித கருத்து கூறினாலும், அது முகம் சுழிக்கும் வகையில் தான் இருக்கும். தலைவர்களை சீண்டினால் அது அண்ணாமலைக்குத் தான் பின்னடைவு." என்றார்.
பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்கிறாரே அண்ணாமலை என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்ததாம். முதலில் அவர் சொன்னது நடக்கட்டும் பார்க்கலாம்" என கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் ஜெயக்குமார்.
முன்னதாக, அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்குமே தவிர தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை குட்டிக் கரணம் அடித்தாலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தை மக்கள் அளிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும். பெரிய கோவில்களின் வருவாயில்தான் சிறிய கோவில்கள் செயல்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் எனத் தெரிவித்தார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications