ஓபிஎஸ் பெயர் புறக்கணிப்பு! அண்ணன் என புகழப்பட்ட இபிஎஸ்! வளர்மதியின் வரவேற்புரையில் நடந்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்த நிலையில் வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் எனக்கூறி அவரது அனைத்து பதவிகளையும் கூறிய நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல் புறக்கணித்தார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
கூச்சல் குழப்பம், தீர்மானங்கள் நிராகரிப்பு, ஒற்றை தலைமை கோஷம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வெளிநடப்பு உள்ளிட்ட பல்வேறு களேபரங்களுடன் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

வளர்மதியின் வரவேற்புரை
இந்த கூட்டத்தில் வரவேற்புரை, இரங்கல் தீர்மானம் மட்டுமே வாசிக்கப்பட்டது. தீர்மானங்கள் முன்மொழிவுக்கு மத்தியிலேயே அனைத்து தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 11ம் தேதிக்கு பொதுக்குழு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். மேடையில் வளர்மதி பேசியதாவது:

வரலாற்று சிறப்புமிக்க கூட்டம்
வரலாற்று சிறப்புமிக்க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ள கட்சியின் அவைத்தலைவர், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி, வருகை தந்துள்ள ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

எம்ஜிஆர் பாடல் பாடி...
காலையில் இருந்து நீங்கள் எல்லாம் இங்கு வந்து உள்ளீர்கள். எம்ஜிஆர் பாடல் தான் ஞாபகம் வருகிறது. என்னத்தான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் தயங்காதே. ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே. அந்த தலைவர் இருக்கிறான். வருவான். வெளியே வருவான். வெகு விரைவில் வருவான்'' என பேசினார்.

பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல்
இந்த பேச்சு மூலம் ஒரு தலைவன் இருக்கிறார். விரைவில் வருவார் என அவர் மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசியுள்ளார். அதேநேரத்தில் வரவேற்புரையில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை கூறுவதற்கு முன்பு இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என அவரது அனைத்து பதவிகளையும் வளர்மதி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருக்கும் நிலையில் கழக ஒருங்கிணைப்பாளர் என மட்டுமே வளர்மதி கூறினார். அதாவது வேண்டுமென்றே ஓ பன்னீர்செல்வத்தின் பெயரை வளர்மதி கூறாமல் புறக்கணித்துள்ளார். இதன்மூலம் அவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதும், ஓ பன்னீர்செல்வத்தை முழுமையாக புறக்கணிப்பதும் வெளிச்சமாகி உள்ளது.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications