முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம்.. 'மீண்டும் ஆட்சி அமைப்போம்'.. ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் உறுதிமொழி!
சென்னை: புரட்சி தலைவர் என்று அழைக்கப்படும் அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் படங்கள் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் மலர்கள் அலங்ககரிப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை
இதேபோல் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றாக உழைத்து வெற்றி பெறுவோம்-மக்களுக்கு நலம் தரும் ஆட்சியை, தமிழர் வாழ்வில் வளம் தரும் ஆட்சியை, மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைத்திடுவோம்'' என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

உறுதிமொழி எடுத்தனர்
மேலும், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடுத்த முழு உறுதிமொழி பின்வருமாறு:-
தி.மு.க.வை வீழ்த்த, நேர்மை என்ற வாளெடுத்தார், வாய்மை என்ற வேலெடுத்தார், அம்மா என்ற வீர மங்கையை தமிழ் மக்களுக்கு புரட்சித் தலைவர் அர்ப்பணித்தார். அந்த வீரத் திருமகள் வழி நடப்போம், அவர் தந்த அம்மாவின் வழி நடப்போம்; ஏமாற்று வேலையெல்லாம் தி.மு.க. ஆட்சியிலே, பொய்யான வாக்குறுதி தி.மு.க. ஆட்சியிலே, தவிக்கிறது, தவிக்கிறது தமிழகமே தவிக்கிறது. மீட்டெடுப்போம் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.

மாதந்தோறும் 1000 ரூபாய் எங்கே?
பொய் வழக்குகள் போடுவதை சட்டப்படி சந்திப்போம். நீட் தேர்வு, கல்வி கடன், டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டர் மானியம், மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் எங்கே? பொங்கல் பரிசுத் தொகை எங்கே? மக்கள் கேள்விக்கு பதில் எங்கே? பதில் வராமல் விடமாட்டோம்.தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம்.

வெற்றி நடைபோடுவோம்
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். எதிரிகளுக்கு சிம்ம சொப்பணம், அரசியல் உலகிலே அழியாத அற்புதம், ஏழைகளுக்கு இரு விழியாக இருள் அகற்றும் சுடர் ஒளியாக வாழ்ந்தவர். வரலாறு படைத்த எம்.ஜி.ஆரின் புகழ்காக்க உறுதி ஏற்போம். புரட்சி தலைவர் வகுத்து தந்த பாதையிலே வீறு நடைப்போடுவோம். வெற்றி நடைபோடுவோம் என்று அதிமுகவினர் உறுதிமொழி எடுத்தனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications