"இரட்டை இலை நிச்சயம் கிடைக்கும்.." அது எப்படி சாத்தியம்? சீக்ரெட்டை உடைத்து பேசிய ஓபிஎஸ்.. பரபர
சென்னை: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் தங்கள் பிளான் என்ன என்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது.

அதில் திமுக கூட்டணி ஏற்கனவே கூட்டணியை உறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் கூட முடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அதிமுகவில் அப்படி இல்லை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இரட்டை இல்லை: இது மட்டுமின்றி ஓ. பன்னீர்செல்வமும் கூட இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் எனத் தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாக அவரே விளக்கத்தைக் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், "உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்" என்றார்.
எப்படி: தொடர்ந்து எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேள்விக்கு, "பொறுத்து இருந்து பாருங்கள்.." என்று சொன்ன ஓபிஎஸ் கொஞ்சம் கேப் விட்டு, "இந்த விவகாரம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை எடப்பாடிக்கு வந்த அனைத்து தீர்ப்புகளும் தற்காலிகமானது என்றே கூறியுள்ளனர். கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிவில் சூட் தான் கவனிக்கும் என்றும் கூறிவிட்டனர். இதற்கு முன்பு வழங்கப்பட்டு எந்த தீர்ப்பும் இதைக் கட்டுப்படுத்தாது என்றும் கூறிவிட்டனர்.
தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமியை இன்று யாருமே நம்பாத சூழல் ஏற்பட்டுவிட்டது. யாரெல்லாம் அவருக்கு நல்லது செய்தார்களோ.. அவர்களுக்கு நன்றியுடன் அவர் நடந்து கொள்ளவில்லை. எனவே, எந்தவொரு அரசியல் கட்சியும் கூட்டணிக்காக அவரை நாடிச் செல்வதில்லை" என்று அவர் தெரிவித்தார். மேலும், உங்கள் மகன் இந்தத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, "மகன் போட்டியிடுவாரா பொறுப்பு இருந்து பாருங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
சசிகலா: சசிகலா குறித்த கேள்விக்கு அவர், "டிடிவி தினகரன் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.. சசிகலாவிடம் இணைந்து பணியாற்ற முடியுமா எனக் கேட்கிறீர்கள். அதற்கு ஓகேவா என்று அவரிடம் சென்று முதலில் கேளுங்கள்.. மேலும், ரஜினி அனைவருக்கும் மரியாதை தரக்கூடியவர். சசிகலா அழைத்ததால் ரஜினி நேரில் சென்று இருப்பார்" என்றார்.
கூட்டணி கணக்கு: மேலும் பாஜக உடனான கூட்டணி குறித்துப் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாகவே நாங்கள் பாஜகவின் என்டிஏ உடன் தான் கூட்டணியில் இணைந்து பயணித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி தான் இந்த கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். முதலில் விமர்சித்தது எடப்பாடி அணி.. அதற்கு அண்ணாமலை பதில் தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். சி.வி. சண்முகம் ஏதோ என்னைப் பற்றிச் சொன்னார் என்கிறீர்கள்.. அவருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்றார்.
மேலும், இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications