எதிர்க்கட்சி பாஜகவா? அண்ணாமலை கருத்துக்கு நிருபர்கள் பெயரை சொல்லி ஜெயக்குமார் சொன்ன ‘சுளீர்’ பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உண்மையான எதிர்க்கட்சியாக பாஜக தான் செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அண்ணாமலை ஆயிரம் சொல்வார், உண்மையான எதிர்க்கட்சி யார் என்று மக்களுக்கு தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத்தான் பார்ப்பார்கள். ஆனால், மக்கள் தான் இறுதி நீதிபதிகள் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் திமுக அரசுக்கு பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியதால், அவர்களே எதிர்க்கட்சி போல செயல்படுவதாக கூறி வந்தனர். அதிமுக - பாஜக இரு கட்சிகள் இடையே, தமிழகத்தில் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது யார் என்பதில் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியாக பாஜகவைத் தான் கருதுகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர் கேள்வியை முடிப்பதற்குள் குறுக்கிட்ட ஜெயக்குமார், "அவர் ஆயிரம் சொல்லட்டும். அவருடைய கட்சியை வளர்ப்பதற்கு அவர் அப்படி பேசுவார். ஆனால், உண்மையான எதிர்க்கட்சி யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணாமலை ஆயிரம் சொல்வார்

அண்ணாமலை ஆயிரம் சொல்வார்

எந்தக் கட்சியாக இருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத்தான் பார்ப்பார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. இப்போது நீங்களே ஒரு கட்சி ஆரம்பித்தால், (அங்கிருந்த ஊடக செய்தியாளர்கள் சிலரது பெயர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்) என்ன சொல்வீர்கள்.. நாங்கள்தான் எதிர்க்கட்சி, வருங்காலத்தில் நாங்கள் தான் ஆளுங்கட்சி. எங்களுக்குத்தான் பலம். எங்களுக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது என்று சொல்வீர்கள். சொல்லிவிட்டுப் போங்கள்.

வெறும் 3 சதவிகிதம்

வெறும் 3 சதவிகிதம்


ஆனால், மக்கள் தான் இறுதி நீதிபதிகள். அவர்களைப் பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுக தான். மிகக்குறைந்த அதாவது 3 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் இன்றைக்கு நாங்கள் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அதனால், உண்மையான எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்குத் தெரியும்." எனக் கூறினார்.

திமுக அரசு

திமுக அரசு

மேலும் பேசிய ஜெயக்குமார், "திமுக அரசு மழைநீர் வடிகால் பணிகளை அவசர அவசரமாக செய்கிறது. ஆனால் தரமான வகையில் அந்த பணிகள் நடைபெற வேண்டும். மழைநீர் வடிகால் விவகாரம் திமுக அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். முதல்வரை அவரது அலுவலகத்தில் காண முடிவதில்லை. சாலை போடாமல், புகைப்படத்தைக் காட்டி மோசடி நடக்கிறது. ரூ.3.75 கோடி ஒதுக்கியதாக கூறிய நிலையில், சாலையே இல்லை. மக்களிடம் திமுக அரசு செல்வாக்கு இழந்துவிட்டது." என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+