ADMK MINISTERS: அமைச்சர் கனவுகளுடன் வலம் வரும் அதிமுக எம்எல்ஏக்கள்.. லிஸ்டும் ரெடி
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் கூறிவிட்டார். மேலும் பெரும்பான்மையுடன் எந்த கட்சி வந்தாலும் ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் திமுக - அதிமுக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவினர் அமைச்சர் கனவுகளுடன் வலம் வரத் தொடங்கியுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரித்துள்ளது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது. திமுக 59 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது.

அதிமுக வியூகம்
சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல், தேமுதிக இணைந்து 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் திமுக கூட்டணி 68 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் இன்று தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர்.
இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க முடியாத நிலையை பயன்படுத்தி அதிமுக ஆட்சியமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி வியூகம் அமைத்து வருகிறார். இதற்காக திமுகவிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. திமுக - அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை இரண்டு கட்சி முக்கிய நிர்வாகிகளும் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
தவெகவால் கடுப்பு
இதனால் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுக்கும் டிமேண்ட் ஏற்பட்டள்ளது. அதிமுக எம்எல்ஏக்களை அந்தக் கட்சித் தலைமை புதுச்சேரியில் உள்ள ரிசார்டில் தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு மூன்று வேளையும் அசைவ உணவு, ஏ.சி அறை, நீச்சல் குளம், கார்டன் என்று சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பழைய கூவத்தூர் ரிசார்ட் நினைவுகளுடன் அதிமுகவினர் இருக்கிறார்கள்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "திமுக ஆட்சிக்கு வரவில்லை என்கிற மகிழ்ச்சியில் இருந்தோம். ஒருகட்டத்தில் தவெகவுக்கு ஆதரவளிக்கும் முடிவில் தான் பழனிசாமி இருந்தார். அதிமுகவிடம் அதிகாரபூர்வமாக எந்த ஆதரவும் கேட்காமல் திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது அதிமுகவுக்கு கடுப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி உறுதி
விஜய் முதலமைச்சர் ஆவதை உதயநிதி விரும்பிவ்லை. அதனால் தான் திமுகவின் ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதே அமைச்சரவை பட்டியல், வாரிய பதவிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றன. ரிசார்ட்டில் இருந்து காலி செய்துவிட்டாலும் ஆட்சியமைத்தே தீரவேண்டும் என்று முடிவில் எடப்பாடி இருக்கிறார்" என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications