ஆட்டம் ஆரம்பிச்சாச்சு.. திருவண்ணாமலை சீற்றம்.. தொடங்கியது அழிவுக்காலம்.. பிரபலத்தின் அதிரடி கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நம்முடைய அரசாங்கத்தில் நிர்வாகத்திறமை திட்டமிடலுடன் இருக்கணும்.. 35 மார்க், 45 மார்க் வாங்கி பாஸ் பண்ண இன்ஜினியர்களை வேலைக்கு வைத்திருந்தால், அவர்களிடம் என்ன பிளானிங் இருக்கும்? இயற்கை சீற்றத்தை யாராலும் முறியடிக்க முடியாது. மக்கள் இன்னும் திருந்தல" என்று வழக்கறிஞர் கீதா காட்டமாக கூறியிருக்கிறார்.

திருவண்ணாமலை மண் சரிவு ஏற்படுத்திய கலக்கம், இதுவரை நீங்கவில்லை.. சித்தர்கள் சிலர், இந்த 2024 இறுதிக்குள் பேரழிவு வரப்போவதாகவும் சொல்லியிருந்தனர். அதேபோல பிரபல நடிகர் அனுமோகன் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் பேட்டியில் இதை பற்றிதான் பேசிவருகிறார்.

tiruvannamalai geetha pm modi

அனுமோகன்: "சித்தர்கள் அந்த காலத்திலேயே சொல்லியிருக்காங்க.. கடல் பொங்கும்.. பூமி பிளக்கும், வானத்தில் எரிநட்சத்திரம் விழும்.. சூறைக்காற்று 500, 1000 கிமீ. தூரத்திலிருந்து அடிக்கும். இவையாவும் இந்த ஆண்டிலேயே நிச்சயம் நடக்கும்.. நிலச்சரிவு என்பது இந்த வருடமே நடக்கும். தென்னிந்தியாவில் முக்கடல் பொங்கும்.. கடலுக்கு கீழே எரிமலை வெடிக்கும். அது சுனாமியாக வரும்.. அப்போது ராவண பூமி கடலில் மூழ்கும்" என்று கூறி பகீர் கிளப்பியிருந்தார்.

இந்நிலையில் 2nd Floor Tamil யூடியூப் சேனல் ஒன்றுக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், பிரபல வழக்கறிஞருமான கீதா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "திருவண்ணாமலை பேரிடர் பேசுபொருளாகியிருக்கிறது. மக்கள் யாரும் அங்கே செல்ல முடியாது, தீபம் ஏற்ற முடியாது" என்றெல்லாம் சொல்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அழிவு வரப்போகுது: அதற்கு கீதா சொன்னதாவது: "இயற்கையின் சீற்றம் நம் நாட்டை அழிக்க போகிறது, பேரழிவு வரப்போகிறது என்று பலமுறை நான் சொல்லியிருக்கேன்.. அப்போதெல்லாம் என்னை பலரும் நக்கல் செய்தார்கள்.. ஆனால், இன்னைக்கு அதுதான் நடந்துட்டு இருக்கு.

கடந்த 2024 ஜனவரியில் முன்கூட்டியே நான் கணித்து சொன்னேன், மோடியை பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்தால், இந்தியாவுக்கே பேராபத்து வரும் இயற்கையாய்" என்று சொல்லியிருக்கேன்

பிரதமர் மோடி: நீங்க நான் சொல்வதை நம்பலேன்னா, கடந்த மே மாதம் தேர்தல் ரிசல்ட் வந்ததிலிருந்து பார்த்தால், சிக்கிம், கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, மணிப்பூர், கர்நாடகா, தெலுங்கானா, மும்பை, தெலுங்கானா, கேரளா வயநாடு என இப்படி ஒரே வருஷத்தில் இத்தனை பேரழிவுகள் இதுவரை இந்தியாவில் வந்ததில்லை..

என்னுடைய கடவுள் என்னிடம் சொல்வது, இந்த மக்கள் இன்னும் திருந்தவில்லை.. தப்பு செய்துட்டேதான் இருக்காங்க.. எவ்வளவு தப்பு செய்தாலும், அவ்வளவும் திருப்பி கிடைக்கும்..

இயற்கையின் சீற்றத்தை அமெரிக்கா போன்ற நாடாகவே இருந்தாலும் அதை அடக்க முடியாது. கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம் வந்ததே? யாரால் என்ன செய்ய முடிந்தது? மக்கள்தான் திருந்தணும். ஏதோ ஒரு சக்தி நம்மை அடக்கி கொண்டேதான் இருக்கிறது. திருவண்ணாமலை, திருப்பதி போன்ற இடங்களில் நிறைய மழை வந்திருக்கிறது.. நிறைய பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன..

சித்தர் சொல்லல: சித்தர் சொன்னதாலதான் இப்படி நடப்பதாக சிலர் இப்போதுவந்து சொல்றாங்க.. சித்தரும் கிடையாது, ஒன்னும் கிடையாது.. கடவுள்கள் எங்கோ ஓரிடத்தில், யாரிடமாவது, எதையாவது சொல்லிட்டுதான் இருக்கிறார்கள்.. இதோ நான் 5 வருடமாக சொல்லிட்டு இருக்கேன். கொரோனா வந்தப்புறம்கூட மக்கள் திருந்தல.. ஏதோ ஒரு சக்தி நம்மை பார்த்துட்டுதான் இருக்கு..

இப்போ பாமர மக்கள்தான் கஷ்டப்படறாங்க.. ஆனால், அரசியவாதிகள் யாரும் கஷ்டப்படல.. அவங்கெல்லாம் பெரிய பெரிய வீடு கட்டி மேலே உட்கார்ந்திருக்காங்க. அரசாங்க வெதர்மேன் ஒன்னு சொல்றார், தனியார் வெதர்மேன் வேறொன்னு சொல்றாரு.. இவங்களுக்குள்ளேயே போட்டி வேற..

பிளானிங்: மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தலைவர்கள் யாராவது வந்தால், அன்றைக்குதான் இவைகளிலிருந்தெல்லாம் ஒரு மாற்றங்கள் வரும்.. நம்முடைய அரசாங்கம், நிர்வாகத்திறமை திட்டமிடலுடன் இருக்கணும்.. 35 மார்க், 45 மார்க் வாங்கி பாஸ் பண்ண இன்ஜினியர்களை வேலைக்கு வைத்திருந்தால், அவர்களிடம் என்னமாதிரியான பிளானிங் இருக்கும்?

ஒரு பாலம் கட்டினால், அல்லது பாதாள சாக்கடை கட்டினால், 150 வருஷத்துக்கு அது வேலை செய்யணும். அந்த அளவுக்கு உறுதியான கட்டுமானம் இருக்கணும். அரசு அதிகாரிகளால்தான் இந்த நாடே குட்டிச்சுவராக போச்சு.. 2வது இந்த அரசியல்வாதிகள்" என்று காட்டமாக கூறியிருக்கிறார் வழக்கறிஞர் கீதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+