Home Loan: வீட்டு கடன் கட்டாமல் வீடு ஜப்தி போனால் மீதக் கடனை கட்ட வேண்டுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டு கடன் கட்ட முடியாமல் வீடு ஜப்தி செய்யப்பட்டு எல்லாம் போன பிறகு மீண்டும் மீதிக் கடன் கட்ட வேண்டுமா? என்பது குறித்து பார்க்கலாம். அந்த மீதமுள்ள கடனை வங்கி எப்படி பெறும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: வீடுகட்டக் கடன் பெற்று அதனை அவர் வட்டியுடன் திரும்பச் செலுத்த இயலாமல் போனால் வங்கி கடனை வசூலிக்க அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

chennai home loan

கடனுக்கு ஈடு வைக்கப்பட்டுள்ள வீட்டை ஜப்தி செய்து அதனை விற்பனை செய்து நிலுவையிலுள்ள கடன் மற்றும் வட்டித் தொகைகளை அதில் பிடித்தம் செய்து கொண்டு மீதம் இருந்தால் அதனைக் கடன்தாரருக்கு திருப்பியளிக்கும்.

ஒருவேளை அந்த வீடு ஏலம்போன தொகை கடனுக்கான நிலுவை அசல் மற்றும் வட்டியைவிட குறைவாக இருந்தால் வீடு விற்று வரவு செய்தபின் இன்னும் உள்ள நிலுவைத் தொகைகளை கடன்தாரர் மீது அடுத்த மேல் நடவடிக்கை எடுத்து கடன்தாரரின் இதர சொத்துக்களிலிருந்து இந்த நிலுவைத் தொகைகள் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக பர்சனல் லோனை தவிர இதர வீட்டுக் கடன், நகைக் கடன் உள்ளிட்டவைகளுக்கு நிகராக அடமானத்தை எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் வீடு கட்ட கடன் வாங்கினால், அந்த வீட்டு பத்திரம் வங்கியில் இருக்கும். அந்த வீட்டு கடன் முடியும் போது சில கோப்புகளில் கையெழுத்துவிட்டு அந்த பத்திரத்தை பெற்று வரலாம்.

அது போல் நகைகளை வைத்து பணம் தேவைப்பட்டால் வங்கிகளில் வட்டி குறைவு என்பதால் பலர் வங்கிகளில் நகைகளை அடமானம் வைப்பர். அவர்களுக்கு நகையின் இன்றைய மதிப்பைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே கடன் வழங்கப்படும்.

நகை கடனை சரி வர கட்டாவிட்டால் நகை ஏலத்திற்கு செல்லும். இதனால்தான் ஆண்டுதோறும் நகைக் கடனை புதுப்பித்து வருவார்கள். அதாவது வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலுமாக அடைக்க முடிந்தால் அடைத்துவிட்டு நகையை மீட்பர். இல்லாவிட்டால் வேறு யாரிடமாவது அந்த பணத்தை பெற்று, வங்கியில் கட்டி, நகையை பெற்று மீண்டும் அதே தொகைக்கு அடமானம் வைத்து அந்த பணத்தை யாரிடம் கடன் வாங்கினார்களோ அவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

அது போல் வீடு கட்ட கடன் வாங்கி அதை அடைக்க முடியாவிட்டால் அந்த வீட்டை ஜப்தி செய்துவிடுவார்கள். அதை ஏலமிட்டு வேறு யாருக்கேனும் விற்று அந்த பணத்தை கடனாக எடுத்துக் கொள்வார்கள். இதுதான் நடைமுறை. எனவே எந்த கடன் வாங்கினாலும் அதை சரியாக செலுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+