அடுத்து திருமழிசை.. சென்னையில் கிளாம்பாக்கத்துக்கு அடுத்து ரூ.486 கோடியில் பிரமாண்ட பேருந்து நிலையம்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில், திருமழிசை பேருந்து முனைய பணிகள் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் பேருந்துகள் நிறுத்துவதற்காக புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.486.6 கோடி மதிப்பில் பிரமாண்ட பேருந்து முனையம் கட்டும் பணி நிறைவடைந்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை தொடங்கி வைத்தார். கிளாம்பாக்கத்தை போன்றே சென்னை பூந்தமல்லியை அடுத்து அமைந்து இருக்கும் திருமழிசை துணைக் கோள் நகரத்தின் அருகே கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்டவற்றுக்கும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் பேருந்து இயக்கும் திட்டத்துடன் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 70 அரசு பேருந்துகள், 30 தனியார் பேருந்துகள், 37 புறநகர் பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையிலான பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. இது அல்லாமல் சென்னை மாநகர பேருந்துகளை நிறுத்தும் வகையில் தனி பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. அதில் 36 பேருந்துகளை நிறுத்தலாம்.
அதேபோன்று பேருந்து நிலைய தரை தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்களையும், 235 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் வகையில் பிரமாண்ட பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக பேருந்துகளை பராமரிக்க பணிமனை வசதி, போக்குவரத்து பணியாளர்கள் தங்குவதற்காக 186 படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறை, 24 மணி நேர குடிநீர் வசதி, 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படுகிறது.
பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 3.75 ஏக்கர் பரப்பளவிலும், அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில் 2.5 ஏக்கரில் பசுமை பகுதியும், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கு பிரத்யேக இடம், மழைநீர் வடிகால், உயர் அழுத்த மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புவழித் தடம், தாய்மார்களுக்கு என பாலூட்டும் அறைகள், மூன்றாம் பாலினத்தவருக்காக தனி கழிப்பறை வசதி, லிஃப்ட்டு மற்றும் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் வசதியுடன் இது அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதமே இது திறக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. இதன் பணிகள் தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் எழுப்பப்பட்ட கேள்விக்கு 50 சதவீத பணிகள் முடிய வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications