கிளாம்பாக்கத்தை விடுங்க.. சென்னையில் அடுத்த பிரமாண்ட பேருந்து நிலையம்.. திறப்பு எப்போது? வெளியான அப்டேட்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடுத்து சென்னையில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் (Kuthambakkam bus stand) வரும் நவம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால், விடுமுறை நாட்களில் எண்ணிக்கை கூடுதலாகி 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் மக்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
சென்னையில் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த வெளியூர் பேருந்துகள் அனைத்தும் ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் 88.52 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல் என முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்தே இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்காக சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தில் ரூ.414 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.
குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்
இந்த நிலையில்தான், திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பஸ் முனையத்தின் முன்னேற்றப் பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர். பின்னர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து தினசரி எம்.டி.சி. 300 பேருந்துகளும், 600 எஸ்.டி.சி. பேருந்துகளும் அதேபோல் அண்டை மாநிலத்திற்கு செல்கின்ற வழித்தடங்களில் ஆந்திரா மாநிலத்தின் 36 பேருந்துகளும் இயக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேருந்துகளில் வார நாட்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
50 ஆயிரம் பேர் பயணம் செய்வர்
விடுமுறை நாட்களில் அந்த எண்ணிக்கை கூடுதலாகி 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் மக்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா காலங்களில் விடுமுறை தொடர்ந்து வருகின்ற விழா நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆம்பூர், வேலூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு பயணிக்கின்ற மக்களுக்கு குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்திற்கு கனெக்டிவிட்டியாக மீஞ்சூர், திருவொற்றியூர், மாதவரம், சைதாப்பேட்டை, திருவான்மியூர் போன்ற பகுதிகளில் இருந்தும், இந்த பகுதி அமைந்திருக்கின்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் இதற்கு இணைப்பு பஸ்களையும் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்த பஸ் முனையத்தை பொருத்த வரை சென்னை சுற்றியுள்ள மக்களுக்கு போக்குவரத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கண்டிப்பாக இந்த பேருந்து முனையம் துவக்கப்பட்ட நாளில் இருந்து கிடைக்கின்ற அளவிற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். இந்த குத்தம்பாக்கம் புதிய புறநகர் பஸ் முனையமானது 2025 நவம்பர் மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications