பள்ளி மாணவனுடன் பழக்கம்.. மகளையே மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை..ஷாக்கில் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 10ம் வகுப்பு மாணவனுடன் பழகியதை அறிந்து 13 வயது நிரம்பிய 9ம் வகுப்பு படிக்கும் சொந்த மகளையே குடிபோதையில் தந்தையே தொடர்ந்து பலாத்காரம் செய்து 8 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதைடுத்து சிறுமியை அவரது தாய் அருகே உள்ள டாக்டரிடம் அழைத்து சென்றார். உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

இந்நிலையில் தான் சமீபத்தில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்பட்டன. இதனால் சந்தேகமடைந்த தாய் அவரை ராஜீவ்காந்தி காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது தான் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.

உறுதியான கர்ப்பம்

உறுதியான கர்ப்பம்

அதாவது சிறுமி எட்டு மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு சிறுமியின் தாய் அதிர்ந்துபோனார். பள்ளி படிக்கும் தனது மகள் கர்ப்பமானதால் அவர் உறைந்துபோனார். மேலும் தான் கர்ப்பமாகி இருப்பதை கேட்டு சிறுமியும் கண்ணீர் சிந்தினார். இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 தந்தை கைது

தந்தை கைது

திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது ஷாக் தகவல் ஒன்று வெளியானது. மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தை தான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

 நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இதுபற்றிய போலீஸ் தரப்பில், ‛‛மாணவி 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 10ம் வகுப்பு மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி மாணவியின் தந்தைக்கு தெரியவந்தது. 10ம் வகுப்பு மாணவனை மகள் காதலிப்பதாக அவர் கூறினார். மேலும் மகள் என்று கூட பாராமல் மாணவிக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மாணவியின் தந்தைக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளதால் அவர் குடிபோதையில் மாணவியை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+