அமைச்சரான கையோடு உடனே ‛வீடியோகால்’.. யாருக்கு தெரியுமா? ஆளுநர் மாளிகையில் உதயநிதியின் பாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இன்று பதவியேற்றார். இதையடுத்து அவர் ஆளுநர் மாளிகையில் இருந்தபடியே ‛வீடியோ கால்' செய்து பாசத்தோடு பேசினார். அவர் யாரிடம் பேசினார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இவரது அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சேர்ந்து மொத்தம் 34 அமைச்சர்கள் இருந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை.

அமைச்சரான உதயநிதி

அமைச்சரான உதயநிதி

இந்நிலையில் தான் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

பெற்றோரிடம் ஆசீர்வாதம்

பெற்றோரிடம் ஆசீர்வாதம்


இதையடுத்து பதவியேற்பு விழாவில் பங்கேற்ற உதயநிதி தான் தனது தந்தையும் முதல்வருமான ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். மேலும் உதயநிதி ஸ்டாலினின் தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா ஆகியோர் விழா மேடைக்கு முன்பு அமர்ந்திருந்தனர். பதவியேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருந்து கீழே இறங்கி தாய் துர்கா ஸ்டாலினிடம் ஆசி பெற்றார். மேலும் மனைவி கிருத்திகா தனது கணவரான உதயநிதி ஸ்டாலினை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

வீடியோ கால் பேசிய உதயநிதி

வீடியோ கால் பேசிய உதயநிதி

இந்நிலையில் தான் உதயநிதி அமைச்சரான பிறகு ஆளுநர் மாளிகையில் வீடியோகால் பேசினார். அப்போது அவர் கைகளை அசைத்து பேசி கொண்டிருந்தார். தற்போது அவர் யாரிடம் பேசினார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பநிதியிடம் வீடியோகாலில் பேசினார். இன்பநிதி வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் உதயநிதி வீடியோ காலில் மகன் இன்பநிதியிடம் பேசினார். அப்போது அவர் தனது தந்தை உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஒரு மகன், ஒரு மகள்

ஒரு மகன், ஒரு மகள்

உதயநிதி ஸ்டாலின் சென்னை லயோலா கல்லூரியில் பிகாம் படிப்பை முடித்தவர். உதயநிதி-கிருத்திகா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் இன்பநிதி. மகள் பெயர் தன்மயா. இதில் தன்மயா உதயநிதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். இன்பநிதி பங்கேற்கவில்லை. இன்பநிதி தற்போது வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் உதயநிதி மகன் இன்பநிதியிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.

நன்றி தெரிவித்த உதயநிதி

நன்றி தெரிவித்த உதயநிதி

மேலும் அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு திமுக தலைவர்கள், அமைச்சர்கள், திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் திரையுலகத்தை சேர்ந்தவர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+