தெரிஞ்சிடுச்சு பார்த்தீங்களா? சீறிய ப. சிதம்பரம்.. குறுக்கே புகுந்த பிடிஆர்.. என்ன இப்படி சொல்றாரே!
சென்னை: அக்னிபாத் திட்டம் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. "அக்னிவீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளனர். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள்.
இந்த நிலையில் திட்டத்திற்கு எதிராக மிக கடுமையான போராட்டங்கள் நாடு முழுக்க நடந்து வருகிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.

ப. சிதம்பரம்
அக்னிபாத் திட்டத்தில் இவர்கள் அறிவிக்கும் சலுகைகள், மாற்றங்கள் எல்லாம் எங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது. இந்த திட்டத்தை இவர்கள் சரியாக வகுக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மோசமான முறையில் திட்டத்தை இவர்கள் உருவாக்கினார்கள் என்பது இவர்கள் செய்யும் மாற்றங்கள் மூலமே தெரிந்து விடுகிறது என்று ப. சிதம்பரம் தனது போஸ்டில் குறிப்பிட்டு இருந்தார்.

அக்னிபாத்
அவர் தனது இன்னொரு போஸ்டில் இந்த திட்டத்திற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே இதற்கு ஒரே தீர்வு மொத்தமாக இந்த திட்டத்தை அப்படியே நிறுத்துவதுதான். பிரச்னையை முதலில் சரி செய்யுங்கள். இது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்துங்கள். பின்னர் தீர்வுகளை கண்டுபிடியுங்கள்.

பிடிஆர்
இளைஞர்களின் கோபமான போராட்டங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் வன்முறைகளை கைவிட வேண்டும். சொத்துக்களை சேதப்படுத்த கூடாது. அவர்கள் மகாத்மா காந்தியின் வழியை பின்பற்றுங்கள். நீங்கள் வெற்றிபெறுவீர்கள்.. என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இந்த திட்டத்தை விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கிண்டலாக மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

பிடிஆர் என்ன சொன்னார்?
அதில்.. என்ன ஜிஎஸ்டி திட்டம் போலவா.. அந்த பொருளில்தானே நீங்கள் சொன்னீர்கள் என்று கேட்டுள்ளார். அதாவது அக்னிபாத் திட்டம் சரியாக வகுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி திட்டத்தை போலவே இதையும் மோசமாக வகுத்துள்ளனர் என்ற பொருளில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த திட்டத்தை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த திட்டம் தவறான நோக்கத்தோடு, முறையின்றி உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இதை எதிர்த்து போராடினாலும், அமைதி முறையில் போராட வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications