சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்த வைத்திலிங்கம்?.. பயத்தில் பேசும் தங்கமணி.. விளாசிய ஜேசிடி பிரபாகர்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையின்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்ததாக தங்கமணி கூறியதில் உண்மையில்லை. அவர் பயத்தில் பேசுகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளராக ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்த நிலையில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். இவர் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். இதனால் இருதரப்பினரும் தொடர்ந்து வார்த்தைபோரில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவரின் தங்க கவசம்.. கோஷ்டி மோதலில் கோட்டைவிடப் போகும் அதிமுக.. ஸ்கோர் அடிக்க நச் ஸ்கெட்சுடன் திமுக!தேவரின் தங்க கவசம்.. கோஷ்டி மோதலில் கோட்டைவிடப் போகும் அதிமுக.. ஸ்கோர் அடிக்க நச் ஸ்கெட்சுடன் திமுக!

தங்கமணி பரபர குற்றச்சாட்டு

தங்கமணி பரபர குற்றச்சாட்டு

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛ கடந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் வேண்டா வெறுப்பாக மட்டுமே ஏற்று கொண்டார். ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். ஓபிஎஸ்சுடன் தனியாக பேச முடியவில்லை. அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். ஓபிஎஸ்க்கு இணை பொதுச்செயலாளர் பதவி கொடுக்க திட்டமிட்டடோம். ஆனால் அவர்கள் அனைவரும் அதிமுக ஒன்று சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இந்த பேச்சுவார்த்தையின்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் தாக்க முயற்சி செய்தார்'' என பகீரங்கமாக குற்றம்சாட்டினார்.

 ஜேசிடி பிரபாகாரர் பேட்டி

ஜேசிடி பிரபாகாரர் பேட்டி

தங்கமணியின் இந்த குற்றச்சாட்டை ஓபிஎஸ் தரப்பு கடுமையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஜேசிடி பிரபாகர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தங்கமணியை கடுமையாக சாடினார். இதுபற்றி அவர் கூறியதாவது:

தங்கமணிக்கு கவலை-அச்சம்

தங்கமணிக்கு கவலை-அச்சம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி மிகவும் குழப்பத்துடன், கவலையுடன், அச்சத்துடன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இப்போது தான் நாமக்கல் மாவட்டத்தை 3 ஆக பிரித்து நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமனம் செய்துள்ளார். இதுவரை தங்கமணியால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களான நல்ல பண்பாளர்கள் அனைவரும் புதிய நிர்வாகிகளை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனை பார்த்து தங்கமணி கவலையடைந்துள்ளார். இதனால் அவர் ஆதரவாளர்களை கூட்டி பேசியுள்ளார். தங்கமணி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். ஈபிஎஸ் தரப்பில் தொடர்ந்து பொய்யை சொல்ல ஜெயக்குமார் மட்டும் இருப்பதாக நினைத்தேன். தற்போது தங்கமணியும் களம் இறக்கப்பட்டுள்ளார்.

தர்மயுத்த காலத்தில் நடந்தது என்ன?

தர்மயுத்த காலத்தில் நடந்தது என்ன?

தர்மயுத்தம் துவங்கிய காலத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் இணைக்க நான் முயற்சி செய்தேன் ஓபிஎஸ் எடுத்த முடிவு மற்றும் அவருக்கு தொண்டர்கள் அளித்த ஆதரவை நாடே பார்த்தது. அப்போது ஒரு பக்கம் அதிமுக ஆட்சி நடக்க, தொண்டர்கள், மக்கள் அனைவரும் ஓபிஎஸ் நோக்கி வந்தனர். இதனால் மாபெரும் தலைவராக ஓபிஎஸ் இருந்தார். இந்த வேளையில் எடப்பாடி பழனிச்சாமி நலிந்து கொண்டிருந்தார். நிலைமை இப்படி சென்றால் கட்சியும், ஆட்சியும் வீணாகிவிடும் என ஓபிஎஸ் கூறினார். அதோடு தர்மயுத்தத்தின் கோரிக்கையை ஏற்றால் நாம் இணைந்து தொண்டர்கள் விருப்பத்தையும், மக்கள் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும் என ஓபிஎஸ் கூறினார். மேலுமு் என்னால் இந்த கட்சி பிளவுபட்டது என்ற நிலைக்கு வரக்கூடாது. ஏனென்றால் நான் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவன் என ஓபிஎஸ் கூறினார்.

ஓபிஎஸ் கைகளை பிடித்த தங்கமணி

ஓபிஎஸ் கைகளை பிடித்த தங்கமணி


இதையடுத்து ஓபிஎஸ் சார்பில் நானும், அவர்கள் சார்பில் வைத்திலிங்கமும் தான் பூர்வாங்க பேச்சுவார்த்தை தொடங்கினோம். அதன்பிறகு அமைச்சர் தங்கமணி, வேலுமணி வந்தனர். இவர்களிடம் நானும், மாபா பாண்டியராஜனும் பேசினோம். அதன்பிறகு பிஎச் பாண்டியன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாத்ன உள்ளிட்டர்வர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த வேளையில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஓ பன்னீ்ர செல்வத்தை தனியாக சந்தித்து பேசினர். கரங்களை பிடித்து கொண்டு மீதியிருக்கும் காலம் அவர் முதல்வராக இருக்கட்டும். அடுத்த முறை முதல்வர் வாய்ப்பு நிச்சயம் கிடைப்பதாக கூறினார்கள். அதுமட்டுமின்றி பெருந்தன்மையாக அனைத்தையும் விட்டு கொடுக்கிறீர்கள். உங்களது நிபந்தனைகளை ஏற்று கொண்டு உறுதியாக நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் அதில் ஒரு உறுதி மொழியை கூட நிறைவேற்றவில்லை.

வைத்திலிங்கம் அடிக்க பாயவில்லை

வைத்திலிங்கம் அடிக்க பாயவில்லை

இந்நிலையில் தான் பொய்யான குற்றச்சாட்டுகளை தங்கமணி கூறியுள்ளார். ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முன்பு அதிமுகவில் ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையின்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்தார் என கூறுவது முற்றிலும் பொய்யானது. அன்றைய தினம் வைத்திலிங்கத்துக்கு கோபம் வந்தது உண்மைதான். ஆனால் அடிக்கபாயவில்லை. என்னயா மனசாட்சி இல்லாமல் இப்படி பேசுகிறாரே போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை படைத்தானே என்ற பாட்டை வேறு வார்த்தைகளில் படித்து சில கேள்விகள் கேட்டார். ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்துவிட்டு இப்போது அவருக்கு வேறு பதவி என்ன வேண்டும் என கேட்பது நியாயம் தானா என்றே வைத்திலிங்கம் கேட்டார். இதில் தவறு எதுவும் இல்லை. இதுநாள் வரை இப்படி பேசாத தங்கமணி இப்போது ஏன் பேசுகிறார். ஏனென்றால் அந்த மாவட்டத்தில் கட்சி என்பது ஓபிஎஸ் பக்கம் திரும்பிஉள்ளது. பிற மாவட்டங்களிலும் இத்தகைய நிலை ஏற்படும்'' என்றார்.

English summary
It is not true that Thangamani said that former minister Vaithilingam rushed to beat former minister Natham Viswanathan during the discussion on AIADMK single leadership issue. OPS supporter JCD Prabhakar has said that he is speaking out of fear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X