பைலட் எதிர்பார்க்கல.. அகமதாபாத் ஏர் இந்தியா ஃபிளைட் துன்பமே தீரல! யாரிந்த பெங்களூர் ஏர்போர்ட் பெண்
சென்னை: அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமான விபத்தில் சிக்கி சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தில் செல்லவே பயணிகள் அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால்தான், விமான விபத்தை தொடர்ந்து ஏா் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பெங்களூர் ஏர்போர்ட்டில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 12-ந் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், பயணம் செய்தவர்கள் தீயில் கருகினார்கள்.. அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த சடலங்கள் இருந்ததால், DNA சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

டிஎன்ஏ மாதிரிகள்
உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட DNA மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்யப்பட்டது. இதில் 211 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 189 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஒப்படைக்கப்பட்ட உடல்களில், 189 பேரில் 142 இந்தியர்கள், 32 பேர் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள், 7 பேர் போர்த்துக்கீசிய நாட்டினர் மற்றும் ஒரு கனடா நாட்டை சேர்ந்தவர் ஆவர். தரையில் இறந்த 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
விமான விபத்து அதிர்ச்சி
இந்த விமான விபத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.. இதனால் விமானத்தில் பயணிக்கவே பயணிகள் அச்சப்பட்டு வருகிறார்கள்.. ஒருவித பயத்தில்தான் பயணம் செய்து வருகின்றனர்.. அதுமட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாகவே விமானங்களும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதுவும் பயணிகளுக்கு அதிருப்தியை உண்டுபண்ணி வருகிறது.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் டாக்டர் ஒருவர், விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன் என்று மிரட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணிவிட்டது.
பெங்களூரு ஏர்போர்ட்
பெங்களூரு ஏர்போர்ட்டில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் சூரத் செல்ல தயாராக இருந்தது. அப்போது, ஆயுர்வேத பெண் டாக்டரான வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர், தன்னுடைய 2 ஹேண்ட்பேக்குகளில் ஒன்றை தன்னுடைய சீட் 20Fல் வைத்துள்ளார்.
ஆனால், இன்னொரு பையை விமான ஊழியர்கள் உட்காரும் இடத்தில் பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார். இதைப் பார்த்த விமான ஊழியர்கள், அந்த பையை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு சொல்லியிருக்கிறார்கள்.
நொறுங்க செய்வேன்
ஆனால், வியாஸ் ஹிரல் இதை ஏற்க மறுத்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.. "என்னுடைய பையை எடுத்தால் விமானத்தை தரையில் விழுந்து நொறுங்கச் செய்வேன்" என்று மிரட்டினார்..
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விமானி, மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு தகவல் அளித்துள்ளார். பாதுகாப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு, பெண் டாக்டர் வியாஸ் ஹிரலை கைது செய்தனர். டாக்டர் ஏர்போர்ட்டில் செய்த இந்த கலாட்டாவால் விமானம் 2 மணி நேரம் தாமதமாக சூரத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
போலீசார் அறிவுறுத்தல்
கைது செய்யப்பட்ட பெண் டாக்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, போலீசாரிடம் கூட அந்த டாக்டர் மோசமாக பேசினாராம்.. இதுகுறித்து பேசிய அவரது கணவர், இதற்கு முன்பும் சில இடங்களில் அவருக்கு அப்படித்தான் நடந்தது என்றும் தற்போதுதான் குடும்பத்தை சந்திக்க குஜராத்திற்கு பயணிக்கிறார் என்றார்..
இதையடுத்து போலீசார் கூறும்போது, "இந்த சம்பவம் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் விதிகளை மதிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக இருக்கிறது. விமான ஊழியர்களின் அறிவுறுத்தலை பின்பற்றாததும், வெறித்தனமாக நடப்பதும் பாதுகாப்புக்கு பெரிய ஆபத்தாக மாறக்கூடும் " என்று தெரிவித்துள்ளனர்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications