எடப்பாடியால் கடுப்பான அதிமுக.. பாமகவை வளைக்க சூப்பர் சான்ஸ்! இப்போ மொத்தமும் போச்சு.. சிக்கல் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மேல் அதிமுக நிர்வாகிகள் மிகுந்த கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சிக்காக, எடப்பாடிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்களை விட்டுவிட்டு இன்பத்துரைக்கும் தனபாலுக்கும் மாநிலங்களவை எம்பி சீட் கொடுத்ததாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 2026-ல் கூட்டணி அமைக்க எளிய வழிகள் இருந்த நிலையில் அதனையும் கோட்டை விட்டுவிட்டார் எடப்பாடி என புலம்புகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், தமிழகத்தில் அரசியல் கூட்டணிகள் புதுப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், அதிமுக, பாஜக, பாமக கூட்டணி தொடர்பான விவகாரங்கள் புதிய சிக்கலை சந்தித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தமிழ்நாட்டிற்கான 6 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவிற்கு 4 இடங்கள், அதிமுகவிற்கு 2 இடங்கள் உறுதியாகியுள்ளது.

AIADMK Rajya Sabha PMK

திமுக, தனது மூன்று வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஒரு சீட்டை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கியுள்ளது. அதிமுகவும், தனது இரு வேட்பாளர்களான இன்பதுரை மற்றும் தனபாலை அறிவித்துள்ளது. இதில் தனபால், வட மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பாமகவிற்கான சீட்டை அவருக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியை உறுதி செய்யாத வகையிலும், முதல்வர் ஸ்டாலினை பாராட்டும் விதமாக பேசியது அதிமுகவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்திற்கு அரசு மரியாதை வழங்கி, குடும்பத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கினார்" என தெரிவித்ததுடன், "2026 தேர்தலை முன்னிட்டு எங்கள் நிலைப்பாடு ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநாட்டில் அறிவிக்கப்படும்" என கூறியதுதான், அதிமுக குழப்பத்திற்கு காரணமாக உள்ளது.

இதற்கிடையே மாநிலங்களவை சீட்டு விவகாரம் தொடர்பாகத்தான் திமுகவுடன் தேமுதிக இணக்கமாக செல்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் பாஜக கூட்டணியால் நிச்சயம் முடியாது. எனவே தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வரவேண்டும். மாநிலங்களவை சீட்டை வைத்து பாமகவை நிச்சயமாக கூட்டணிக்கு அழைத்து வந்திருக்கலாம்.

சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சிகளுக்கு சற்று குறைவாக கூட சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி இருக்கலாம் என்கின்ற அதிமுகவினர். செங்கல்பட்டு மாவட்ட அதிமுகவினரும் தனபாலின் வருகையால் அதிருப்தியில் இருக்கின்றனர். கட்சிக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத அவருக்கு வாய்ப்பு கொடுத்தது எப்படி? எனவும், எத்தனை பேரை அவருக்கு தெரியும்? என கேள்வி எழுப்புகின்றனர்.

அதிமுகவுக்கு உழைத்த பல சீனியர்கள் எடப்பாடி பழனிச்சாமியால் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியால் தோல்வியை சந்தித்த ஜெயக்குமார், கோகுல இந்திரா, செம்மலை போன்றவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களையெல்லாம் விட்டுவிட்டு தனபாலுக்கு சீட்டு கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் சீனியர்கள். சொந்த கட்சி நிர்வாகிகளை புறக்கணித்துள்ளதோடு கூட்டணிக்கான வாய்ப்புகளையும் எடப்பாடி பழனிச்சாமி உடைத்து விட்டதாக கூறுகின்றனர்.

மேலும், வடதமிழகத்தில் முக்கியமான வாக்குவங்கியைக் கொண்ட பாமக, 2021 சட்டமன்றத் தேர்தலில் சில மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெற்றது. கடந்த மக்களவை தேர்தலில் 4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, பாமகவை அதிமுகவை கூட்டணியில் நிலைநிறுத்தும் முயற்சியாகவே மாநிலங்களவை சீட்டை கொடுத்திருக்கலாம். ஆனால், அன்புமணி ராமதாஸுக்கு நேரடியாக சீட்டை வழங்காமல், கூட்டணி வாய்ப்பை உடைத்து விட்டதாக குமுறுகின்றனர். மொத்தத்தில், பாமக கூட்டணியை உறுதிப்படுத்த அதிமுகவுக்கு இருந்த ஒரு வாய்ப்பும் பறிபோயுள்ளதாகக் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+