சைலண்டாய் வேலையைக் காட்டிய எடப்பாடி! பட்டியலை தயார் செய்த ‘மாஜிக்கள்’! சென்னைக்கு பறந்த பரபர லிஸ்ட்!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டி நியமிக்கும் நிலையில் திரை மறைவில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பட்டியலை தயாரித்துள்ள மாவட்ட செயலாளர்கள் அதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அனுப்பியுள்ள நிலையில் விரைவில் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தொண்டர்களை மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது. ஏன் ஓபிஎஸ் இபிஎஸ் மாறி மாறி வெளியிட்டு வரும் அறிவிப்புகளால் நிர்வாகிகளே குழப்பத்தில் தான் இருக்கின்றனர்.

அதிமுக மோதல்
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன் என அதிரடியாக கூறிய ஓபிஎஸ் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து வருகிறார். ஏற்கனவே பல மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு நிலையில் தற்போது சேலம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஓபிஎஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் கடந்த காலங்களில் ஒன்றாக பயணித்த அதிமுகவினர் தற்போது தங்கள் மாவட்டத்திற்கு உள்ளேயே எதிர் எதிர் அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

சட்டமன்ற கூட்டத் தொடர்
அக்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் தொடங்க இருக்கும் நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவுக்கு அடுத்தடுத்து கடிதங்களை எழுதி வருகின்றனர். இது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும் என்பதே அரசியல் களத்தில் பேசு பொருளாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் சபாநாயகர் இருதரப்பும் மனம் நோகாதபடி முடிவெடுக்கப்படும் என பீடிகை போட்டுள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்ணா தொழிற்சங்கம்
இந்த நிலையில் தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பட்டியல் ஒன்றை அனுப்பி இருக்கின்றனர். ஏற்கனவே மாவட்ட செயலாளர் நகர் கழக நிர்வாகிகளுக்கு உட்கட்சி தேர்தல் நிறைவடைந்து நிலையில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பட்டியல் வெளியிடும் திரை மறைவு பணிகள் தொடங்கி முடிந்து இருக்கிறது. அதிமுகவின் பிரதான பிரிவுகளில் ஒன்றான அண்ணா தொழிற்சங்கத்தில் மின்வாரியம் போக்குவரத்து உள்ளிட்ட 14 பிரிவுகள் இருக்கின்றன. இவற்றிற்காக தேர்தல் நடத்தப்படாத நிலையில் பேரவை செயலாளராக இருப்பவரின் பரிந்துரையின் பேரிலேயே நியமனம் நடைபெற்று வருகிறது.

பட்டியல் தயார்
அதுவும் மாவட்ட செயலாளராக யார் இருக்கிறார்களோ அவர்கள் பரிந்துரைக்கும் நபர்தான் மாவட்ட அளவிலான அண்ணா பேரவை செயலாளராகவும் அவர் நியமிக்கும் பிற நிர்வாகிகளே பதவியில் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அண்ணா தொழிற்சங்க பேரவை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அதிமுக பொன்விழா நிறைவு பணிகள் முடிவடைந்த பிறகு இந்த பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாவட்ட செயலாளர்கள் இந்த பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்த நிலையில் அதனை இறுதி செய்யும் பணியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈடுபட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications