திமுகவின் ஈவு இரக்கமற்ற அறிவிப்பு! திமுகவை கண்டித்து போராட்டம்.. அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ் - இபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சொத்து வரி உயர்வுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக அரசைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் வரும் செவ்வாய்க் கிழமை அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில்," பொழுதுவிடிந்து, பொழுதுபோனால் திமுக அரசு மக்களை துன்புறுத்தும் செயல்கள் எதையேனும் செய்துகொண்டே இருக்கிறது.

"விடியல் அரசு" என்று பெயர் சூட்டிக்கொண்டு, ஆட்சிக்கு வந்த திமுக-வின் இருள் சூழ்ந்த ஆட்சி மக்கள் மீது சுமைகளை ஏற்றிக்கொண்டே. செல்கிறது.

பொருளாதார நெருக்கடிகள்

பொருளாதார நெருக்கடிகள்

எத்தனை பொருளாதார நெருக்கடிகள் வந்த போதும் அம்மாவின் அரசு எழை, எளிய, உழைக்கும் மக்களின் நலன்களைக் காப்பாற்றவும். அவர்களை சமூகத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவாவும் மேற்கொண்ட திட்டங்கள் ஏராளம். அந்தத் திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக திமுசு அரசு சீர்குலைத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, தாலிக்குத் தங்கம், அம்மா மிளி கிளிளிக் போன்ற புரட்சிகரமான திட்டங்களை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமஸ், மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் சொத்து வரி உயர்வு போன்ற கடுமையான நடவடிக்கைகளை, மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.

சொத்து வரி உயர்வு

சொத்து வரி உயர்வு

சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை தமிழ் நாட்டில் சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்று தனது தேர்தல் அறிக்கையில் எண். 487-ஆவது வாக்குறுதியாக பக்களுக்கு உறுதி அளித்த திமுக, கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மக்கள் மீளமுடியாமல் அல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது, வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகம் ஆகும்.

வல்லுநர் குழு

வல்லுநர் குழு

சொத்து வரி உயர்வு குறிந்து பொதுமங்களிடமும், வணிகப் பெருமக்களிடமும் கருத்துகளைக் கேட்டு, அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவே அரசின் முடிவு இருக்கும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அப்போதைய அம்மா அரசு திட்டவட்டமாக அறிவித்தது. பொதுமக்கள், வணிகர்கள் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க வல்லுநர் குழு ஒன்றையும் அம்மா அரசு அமைத்திருந்தது. நம்முடைய கழக ஆட்சியின்போது சொத்து வரி உயர்த்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்து மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் காப்பாற்றினோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைத்த வல்லுநர் குழு கடந்த 11 பாதங்களாக நடைபெறும் திமுக ஆட்சியில், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கருத்துகளைக் கேட்டதா? எங்கே, எப்பொழுது, யாரிடம் கருத்து கேட்கப்பட்டது ? பங்கு கொண்டவர்கள் தெரிவித்த கருத்துகள் என்ன ? என்ற வினாக்களுக்கு அரசு பதில் சொல்லட்டும்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

கொரோனா பாதிப்பு விலைவாசி உயர்வு வேலை இழப்பு வருமானம் குறைவு என்று பன்முனை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லப்படும் நகர்ப்புற மக்களின் தலையில் 150 விழுக்காடு சொத்து வரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலை குலையச் செய்திருக்கிறது திமுக அரசு. ஓய்வூதியம் பெறுவோர் தங்களுக்கௌ கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல்படும் நிலையையும். வாடகைக்கு குடி இருப்போரின் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து வாடகையை உயர்த்துவதும், வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்துவதும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன,

கண்டன ஆர்ப்பாட்டங்கள்

கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு சொத்து வரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும்: மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5.4.2022 - செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், வருயாய் மாவட்டத் தலைநகரங்களில் பாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+