2 நாட்களில் முக்கிய முடிவு.. கியரை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.. கூட்டணிகளுக்கு இவ்வளவுதான் இடம்!
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்னும் 2 நாட்களில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 31 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஸ் கோயல் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு நடத்தினார். இந்த மீட்டிங்கில் பாஜகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளில், பாமகவிற்கு 23 தொகுதிகள், தினகரன் திரும்பி வந்தால் அமமுகவிற்கு 3 தொகுதிகள் வழங்க எடப்பாடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் கூட்டணி சமூகமாக இருக்கும் வகையில் ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும், கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைப்பது பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் மறுப்பு
ஆனால் டிடிவி தினகரன் இதை மறுத்துள்ளார். தேனி ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமமுக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எங்களை தவிர்த்து விட்டு யாரும் வெற்றி பெற முடியாத நிலை நிலவுகிறது. தேசிய ஜனநாயக வட்டணியில் அமமுகவுக்கு 6 சீட்கள் ஒதுக்கீடு என்பது வதந்தி. ஊடகங்கள் செய்தியின் உண்மைதன்மை தெரியாமல் வெளியிடக் கூடாது. எங்கள் வீட்டு பிள்ளைக்கு நாங்கள் தான் கல்யாணம் செய்வோம், என்று கூறி உள்ளார்.
ஓ பன்னீர்செல்வமும் மறுப்பு
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் இந்த கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் (AIADMTUMK) நிர்வாகிகள் உடன் நேற்று ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. அதன்படி அதிமுகவில் மீண்டும் இணையலாமா?அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெக உடன் கூட்டணி வைக்கலாமா? திமுக உடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இதில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக உடன் இனி இணைய வேண்டாம்.. அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இனி அதிமுக உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை .. இபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. Option a தவெக Option b திமுக என்று இரண்டு ஆப்ஷன் கொடுத்து கேள்வி கேட்கப்பட்டது. இரு ஆப்ஷன்களை கொடுத்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுப்பான டெல்லி
இதையடுத்தே மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது பெரிய அளவில் பலனை கொடுக்கவில்லை என்று டெல்லி அப்செட்டில் உள்ளதாம். இவரை அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடும் கூட்டணி உறுதியாகிவிடும் என்று அமித் ஷா நினைத்தது.. கைகூடவில்லை என்று கூறப்படுகிறது.
ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இரண்டு பேருமே கூட்டணிக்கு வரவில்லை. தேமுதிக, பாமகவும் இதை பற்றி எதுவும் சொல்லவில்லை. இதனால் பியூஸ் கோயலை அனுப்பியது தோல்வியில் முடிந்துவிட்டது என்று அமித் ஷா அதிருப்தியில் இருக்கிறாராம்,
இந்த நிலையில்தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்னும் 2 நாட்களில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications