அதிமுக + பாஜக கூட்டணி.. கேப்பே விடாமல் அடிக்கும் எடப்பாடி.. ஜெகன் ஸ்டைலில்.. இன்னொரு முக்கிய முடிவு
சென்னை: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.

2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார். இந்த கூட்டணி காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கு சாதகம்.. யாருக்கு பாதகம் என்று இங்கே பார்க்கலாம்.
முதலில் பாஜக அதிமுக கூட்டணி அமைவதால் எத்தனை முனை போட்டி நிலவும் என்று பார்க்கலாம். இந்த கூட்டணி காரணமாக நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த கூட்டணிக்கு வராமல் போகலாம். ஏனென்றால்.. நாம் தமிழர் - பாஜக எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சி. விஜய் வேறு தலைமையிலான.. அதாவது எடப்பாடி தலைமையிலான கூட்டணிக்கு வர மாட்டார். இதனால் 4 முனை போட்டி.. அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி , தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும். இந்த நிலையில்தான் தேர்தலுக்கு தயாராவதற்காக எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளாராம்.
எடப்பாடி பழனிசாமி பாதயாத்திரை
2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அவரின் ஸ்டைலில் தற்போது எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளாராம். சமீபத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கூட்டணி
ஊரக உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டன அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சுற்றுப்பயணம் போனால்.. கட்சி மீண்டும் வளரும்.. மக்களிடம் நாம் சென்று சேரலாம் என்று எடப்பாடி நினைக்கிறாராம். இதை மனதில் வைத்தே 234 தொகுதிகளிலும் மே இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்.என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாராம். கூட்டணி அமைத்துவிட்டோம்.. அடுத்து தேர்தல் பணிகள்தான்.. 234 தொகுதிகளிலும் மே இறுதியில் யாத்திரை மேற்கொண்டால் சூழல் நமக்கு சாதகமாக மாறும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறாராம்.
-
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications