"கவுண்டனுக்கு கவுண்டன் உக்காந்து பேசிருக்கலாம்ல.." செங்கோட்டைனுக்கு கொங்கு பெண் கேள்வி! வீடியோ!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து இருக்கிறார். இந்த நிலையில் பெண் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 'கவுண்டனுக்கு கவுண்டன் உட்கார்ந்து பேசி இருக்கலாம்' என அந்த பெண் பேசி இருப்பதை அதிமுகவுடன் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
மிக நீண்ட ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு தவெகவில் இனைந்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், மிக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன். இது கொங்கு மண்டலத்தில் பலத்த விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
எம்ஜிஆரால் வெறும் 25 வயதில் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு, எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டவர் ஈரோட்டை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன். அதிமுக வரலாற்றில் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்கிற பெருமை அவருக்கு உண்டு.

செங்கோட்டையன்
தற்போதைய சூழலில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மிக மூத்த சீனியர் என்றால் அவர் தான். செங்கோட்டையனை அறியாதவர்களே அதிமுகவில் இல்லை என்று கூட சொல்லலாம். எம்ஜிஆரின் காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் வரை நிழல்போல் அதிமுகவில் இணைந்திருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போதைய சூழ்நிலையில், தமக்குக் கிடைத்த முதல்வர் வாய்ப்பை விட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்து, அவரை உயர்த்தியவர்களில் முக்கியமானவர் செங்கோட்டையன்.
விஜய் தவெக
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக எடப்பாடியின் சில முடிவுகள் மீது அவர் மிகுந்த அதிருப்தியில் இருந்தார். 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமெனில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் ஏற்பட்ட பிளவைச் சரிசெய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் பல தடவை எடப்பாடியிடம் வலியுறுத்தினார். பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
அதிமுகவினர் அதிருப்தி
இந்நிலையில், செங்கோட்டையன் குறித்து பெண் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 'கவுண்டனுக்கு கவுண்டன் உட்கார்ந்து பேசி இருக்கலாம்' என அந்த பெண் பேசி இருப்பதை அதிமுகவுடன் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் பேசியுள்ள பெண்," பாருங்க மக்களே.. இதில் ஏதாவது நியாயம் இருக்குதா.. முதன் முதலாக இப்போதுதான் என் செல்போன் முன்னாடி உட்கார்ந்து நான் வீடியோ போடுறேன். எங்களுக்கெல்லாம் அவ்வளவு கேவலமா தெரியுது. அவர் பண்ண விஷயம்.
பெண் பேச்சு
சின்ன விஷயம் தான்.. ஆனால், பெருசா தெரியுது. மனசுக்கு பாதிப்பா கூட தெரியுது கோபிசெட்டிபாளையத்தில் வாழ்ந்தவங்களுக்கு 50 ஆண்டுகால அரசியல் சாதனையில் கடைசி காலத்துல உன் தலையில நீயே நெருப்பு அள்ளி கொட்டி இருக்க.. மண்ணை கூட அள்ளி கொட்டல.. இனத்துக்கு இனம்.. கவுண்டனுக்கு கவுண்டன் நீ உக்காந்து பேசி இருக்கலாம் இல்ல..
"கோபியில் கிழிச்சிடுவாரு, கொங்குல கொடி நட்டுடுவாரு"ன்னெல்லாம் பேசறவன் பார்க்க வேண்டியது👇
— Newman (@roadoram) November 29, 2025
" கவண்டனுக்கு கவண்டன் உக்காந்து பேசாம கூத்தாடி பின்னால போறியே"ன்னு சாதிசனத்தைப் பேச வச்சிட்டார் கரும்பு மனிதர் pic.twitter.com/VQlin7Mplx
செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு
ஒக்காந்து பேசுனா.. குடும்ப பிரச்சனை.. நாட்டு பிரச்சனையே தீருது. இத்தனை வருஷமா பாடுபட்டு ஒண்ணுமே இல்ல நாசமா போச்சு. எல்லாத்துக்கும் பேர் கெட்டுப் போச்சு. இன்னைக்கு இருப்பதிலேயே திராவிட கட்சியிலேயே மூத்த அரசியல் தலைவர் நீதான். இன்னைக்கு பேர கெடுத்து வச்சிருக்க.. கூத்தாடி கூட போய் சேர்ந்திருக்கிறார். அதுக்கு நமக்கு ஏதாவது சம்பந்தம் உண்டா" என பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications