தேர்தல் களத்தில் தீவிரமாக குதித்தது அதிமுக.. வேட்பாளர்களுக்கு விருப்ப மனு வழங்கும் தேதி அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு முழு அளவில் அதிமுக ஆயத்தமாகிவிட்டது. விருப்ப மனுக்களை பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி 24.2.2011 முதல் 5.3.2021 வரை விருப்ப மனு பெறப்படுகிறது.

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 24.2.2021 புதன்கிழமை முதல் 5.2.2021 வெள்ளிக் கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் உரிய கட்டணங்களை செலுத்தி படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு - 15,000/-
புதுச்சேரி - 5.000/-
கேரளா - 2.000 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிமுக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதிமுக தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டது என்பதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications