அதிரடி.. அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்.. எடப்பாடிக்கு ஓபிஎஸ் பகிரங்க கடிதம்
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, ஒற்றைத் தலைமை விவகாரம் பேசப்பட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே கடந்த சில நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

அதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்தநிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக குழப்பான சூழல் நிலவுவதால், பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ்-இடம் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அந்த கடிதத்தில், பொதுக்குழுவில் கடந்த கால நடைமுறைகள் பின்பற்றப்படாது என்பதால் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து மீண்டும் ஒருமுறை ஆலோசிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஜூன் 14ம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, முன்னறிவிப்பின்றி ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டைத் தலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதோடு, தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த அசாதாரண சூழல் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் அமைதி காப்பது அவசியம்.இதனால் ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டம் குறித்து இருவரும் முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை வெளியிட்ட பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாக ஆதரித்துள்ளனர். 15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர். எடப்பாடி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சித்து வருகிறது. கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications