மேடம் இது ஆக்சன் மேடம்.. அதிமுகவிடம் டீல் பேசிட்டு ஐஜேகேவை குறை சொல்லும் லீமா ரோஸ்! பறந்த கண்டனம்!
சென்னை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் மார்ட்டின் ஐஜேகேவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுகவுடன் ரகசியமாக பேச்சு நடத்தி விட்டு, ஐஜேகே மீது குற்றம் சாட்டக் கூடாது என அக்கட்சி விமர்சித்துள்ளது.
இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபல தொழிலதிபரும் லாட்டரி அதிபருமான மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் ஐஜேகேவின் பொதுச் செயலாளராகவும், பின்னர் இணை பொது செயலாளர் பதவியையும் வகித்து வந்தார்.
இந்த நிலையில் கட்சிகள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். அதிமுக தலைமையுடன் நெருக்கம் காட்டி வந்த லீமா ரோஸ் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வகுப்பு தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

லீமா ரோஸ் மார்ட்டின்
இந்த நிலையில் விரைவில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பை மேற்கொள்ளலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சுயநல பூக்கோடு லீமா ரோஸ் மார்ட்டின் செயல்பட்டதாகவும், அதிமுகவுடன் தொடர்பிலிருந்து விட்டு ஐஜேகேவை குற்றம் சாட்டக் கூடாது என அந்த கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள ஐஜேகே," நீங்கள் விலகியதற்கு காரணத்தை கூறாமல் விலகுகிறேன் என்பது உங்கள் சுயநலப் போக்கை காட்டுகிறது. இந்த கட்சிக்கும் இனத்திற்கு பாடுபட்டவர்கள் ஏராளம் உண்டு.
ஐஜேகே
உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் தொழிலுக்கும் பிரச்சினை வரும் போது நேரடியாகவோ மறைமுகவோ இந்த இனமும் இந்த கட்சியும் உங்களுக்கு உறுதுணையாக இருந்தது. உங்களை போன்று இங்கு கடுமையாக உழைத்தவர்களெல்லாம் பெரும் பணக்காரர்கள் அல்ல. சாதாரண நடுத்தர மக்களே! நீங்கள் கட்சியின் பதவிக்காக வேலை செய்தீர்கள். ஆனால் பல ஆயிரம் நபர்கள் இனத்திற்கு வேலை செய்து பொன் பொருள் இழந்தவர்கள் ஏராளம். அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாது! காரணம் உங்களுக்கு மேல்மட்ட அரசியல் மட்டுமே தெரியும்.
அதிமுக டீல்
நீங்கள் மூன்று நான்கு மாதங்களாக கட்சி எனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறுவதற்கு எதாவது ஒரு காரணத்தை சொல்லி இருக்க வேண்டும். இவ்வளவு நாளாக உழைத்த உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் எங்கோ ஏதோ ஒரு தவறு நடந்திருக்க வேண்டுமல்லவா? அது என்ன என்று நீங்கள் வெளிப்படையாக கூறியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் பொதுவாக ஒரு குற்றச்சாட்டை சுமத்துவது ஏற்புடையதல்ல. சமீபகாலமாக உங்கள் பயணம் அதிமுக பக்கமே இருந்ததே என்று யூகிக்க முடிகிறது. நீங்கள் செல்வாக்கு பெற்றவர் தான் கடுமையாக உழைத்தவர் தான் அதில் மாற்று கருத்து இல்லை.
2026 சட்டமன்ற தேர்தல்
சிறிய கட்சியோ பெரிய கட்சியோ தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஏழையோ பணக்காரனோ நாம் அனைவரும் கட்டுப்பட்டவர்கள். சமீபகாலமாக சிலர் தூண்டுதல் மூலம் நீங்கள் அதிமுக தலைமையை சந்திப்பதும் அவர்களிடம் தேர்தல் வியூகம் வகுப்பதும் இருந்ததே என்று யூகிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் நீங்கள் அதிமுகவில் இணைந்து விட்டீர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளீகள் என்ற உண்மைச் செய்தியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் அதிமுக சார்பில் அவர்களை சந்திக்கவில்லை. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை எனில் உங்கள் கேள்வி நியாயமானது. அதே சமயம் நீங்கள் இவை அனைத்தும் செய்திருந்தால் தலைமையை மீறி செய்த குற்றம் உங்களுடையது." என கூறியுள்ளது.
-
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக்












Click it and Unblock the Notifications