இனி வேலைக்கு ஆகாது! அதிமுக வழக்கில் சாதகமான தீர்ப்பு வருமா? எடப்பாடி எடுத்த முக்கிய முடிவு! அதேதான்!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு விரைவில் வர இருக்கும் நிலையில் தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமான சில நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய முடிவு ஒன்றினை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியதிலிருந்து இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போது இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இரட்டை தலைமையால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி எடப்பாடி தரப்பு போர்க்கொடி தூக்கிய நிலையில் தற்போது ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்.

அதிமுக மோதல்
இது தொடர்பாக பாஜக தலைமை எவ்வளவோ சமரசம் செய்தும் எடப்பாடி பழனிச்சாமி மிகப் பிடிவாதமாக இருக்கிறார். அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் வந்தால் தனது நிலைமை என்னவாகும் என்பதை உணர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர். அதே நேரத்தில் ஓபிஎஸ் எதற்கும் தயாராக இருக்கிறார். இரட்டை தலைமை தொடர்பும் மீண்டும் அதிமுகவில் சேரவும் கூட்டணி தலைமை தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் பாஜக சொல்வதை கேட்டு நடக்கும் செல்ல பிள்ளையாகவே ஓபிஎஸ் இருக்கிறார்.

பாஜக தரப்பு
இதனால் அவருக்கு சாதகமான சில அம்சங்கள் பாஜக தரப்பு மூலம் செய்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றிருக்கிறது. அதில் கட்சி விதிகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பதால் அவர் தரப்புக்கே சாதகமாக தீர்ப்பு வரும் என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு அல்லது தேர்தல் ஆணையத்திற்கு என தீர்ப்பு எப்படி வந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.

சட்டசபை கூட்டத் தொடர்
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கூட இருக்கிறது. ஆளுநர் உரையுடன் இந்த கூட்டம் ஒன்பதாம் தேதி தொடங்கும் நிலையில் அன்று மாலை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அடுத்து எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய சூழல் படி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தான் எனவும் கடந்த முறை போலவே இந்த முறையும் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெளிவாக கூறிவிட்டார். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது.

எடப்பாடி தரப்பு
கடந்த கூட்டத் தொடரின் போது முதல் நாளில் எடப்பாடி தரப்பு கூட்ட தொடரை புறக்கணித்த நிலையில் இரண்டாவது நாளில் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் அவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் தற்போதும் அதே நிலை நீடிக்கும் என கூறப்படுகிறது. தான் அதிமுக தலைமை என எடப்பாடி கூறி வந்தாலும் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல அவரது மகனான ஓபி ரவீந்திரநாத் குமாரும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவே மக்களவை ஆவணங்களின்படி தொடர்கிறார்.

மீண்டும் போராட்டம்
இதன் மூலம் சட்டரீதியாக ஓ.பன்னீர்செல்வத்திற்கே அங்கீகாரம் இருக்கிறது தற்போது இந்த விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடரிலும் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என பங்கேற்றால் தங்கள் தரப்புக்கு அது பின்னடைவாக கருதப்படும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற கூட்டத் தொடரை எடப்பாடி தரப்பினர் புறக்கணிக்கலாம் எனவும் அதற்காக எம்எல்ஏக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்டமன்ற வாயில் முன்பாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications