தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின், எங்க போனாலும் அமோக வரவேற்பு, மாஸ் காட்டும் எடப்பாடி
சென்னை: கடந்த ஞாயிறு அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து தரப்பு மக்களும் மகிழும் வகையில், அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விவசயிகள், நெசவாளர்கள், பெண்கள், இலங்கை தமிழர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் பல்வேறு வாக்குறுதிகளை அதிமுக தேர்தல் அறிக்கை மூலமாக முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

தேர்தல் அறிக்கை வெளியிட்ட கையோடு, பிரச்சார களத்தில் இறங்கிய முதலமைச்சருக்கு செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்றமுறை கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது மக்கள் வெள்ளம் அலை கடலென திரண்டனர். ஆனால் இம்முறை திமுகவின் கோட்டை எனப்படும் காவிரி டெல்ட்டா பகுதிகளிலும், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை மக்கள் தந்து வருகின்றனர். விவசாயிகள் அதிக அளவில் இருக்கும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சரின் பிரச்சாரத்திற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. காரணம், முதல்வர் ஒரு விவசாயி என்பதாலும், விவசயிகளுக்கு முதல்வர் அளித்த பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி தான். மேலும், ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் விவசாயிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து பேசி வரும் முதலமைச்சர், தான் ஒரு விவசாயி என்பதால் விவசயிகள் சந்திக்கும் கஷ்டங்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு தொடர்ந்து அறிவிப்புகளை மேற்கொண்டு வருவதால் முதலமைச்சரை தங்களில் ஒருவராக கருதுகின்றனர். அதனால் காவேரி டெல்டா பகுதியும், கொங்கு மண்டலம் போல அதிமுக கோட்டையாக மாற இம்முறை வாய்ப்புள்ளது.

அதனால் அதிமுக தேர்தல் அறிக்கை மற்றும் முதலமைச்சரின் தொடர் பிரச்சாரம் என அதிமுகவிற்கு இரட்டிப்பு பலத்தை கொடுத்துள்ளது.

-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications