அதிமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்..உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடப்பதாக கூறியதால் நடவடிக்கை!
சென்னை: மதுரை வடக்கு 2 ஆம் பகுதி 15 கிழக்கு வட்டச் செயலாளர் எம்.உதயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார் அண்மையில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், "அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையில் சேர எங்களுக்கு டார்கெட் நிர்ணயிக்கிறார். அதிமுகவில் சேர யாரும் வராததால் வாக்காளர் பட்டியலை வைத்து போலியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.
எல்லா கட்சிக்காரர்களும் வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். அவர்களை எப்படி அதிமுகவில் உறுப்பினராக சேர்க்க முடியும்? போலியாக கையெழுத்து போட்டு கொடுக்கச் சொல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இதேபோல் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பொதுச் செயலாளர் கவனத்துக்குப் போக வேண்டும்." என்று தெரிவித்தார்.

அதிமுகவில் நிர்வாகிகளின் நெருக்கடி காரணமாக மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கட்டுக்கட்டாக உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு கட்சி நிர்வாகியே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அதிமுகவினர் இடையே சலசலப்பு எழுந்தது.
இந்நிலையில், அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடப்பதாக ஊடகங்களில் பேட்டி அளித்த, மதுரையைச் சேர்ந்த வட்டச் செயலாளர் உதயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. M. உதயகுமார், (15 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், ஜவஹர்புரம், மதுரை வடக்கு 2-ஆம் பகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications