"க்ளைமேக்ஸ்" வந்தாச்சு.. சுப்ரீம்கோர்ட்டில் இன்று அதிமுக பொதுக்குழு வழக்கு.. எகிறுகிறது எதிர்பார்ப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடக்கிறது
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைப்பபதாகவும் அறிவித்திருந்தனர்.. அதன்படி, பொதுக்குழு வழக்கின் விசாரணை, இன்று மதியம் 2.30 மணிக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடக்க உள்ளது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பிலும் சுப்ரீம்கோர்ட்டில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஒத்திவைப்பு
இந்த மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் பல முறை விசாரணைக்கு வந்த போது, தனக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்டிருந்தார் ஓ பன்னீர்செல்வம்.. ஆனால், அதற்கு நீதிபதிகள் தரப்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. மறுபடியும் வழக்கு டிசம்பர் 15ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, நேரமின்மை காரணமாக, வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டனர்..

ஹாலிடே கிறிஸ்துமஸ்
அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு அதாவது நேற்றையதினம் தள்ளிவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். உச்சநீதிமன்றத்தில் நேற்று மதியம் 2.30 மணிக்கு, விசாரணை தொடங்கிய நிலையில், சென்னை ஹைகோர்ட்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டு அறிந்தனர்.

நிலுவை
இந்த விவகாரம் தொடர்பாக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே? என்று கேட்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கில் அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியத்தை அறிய விரும்புகிறோம் என்றனர்.. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாகவும், இதனால் வழக்கை விரைந்து விசாரணை நடத்த வேண்டும், ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வாதிடப்பட்டது.. அதே சமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுகள் உள்ளது. அதாவது வருகின்ற 2026-ம் ஆண்டு வரையில் பதவிக்காலம் இருப்பதால் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது...

அர்த்தம் என்ன
இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துபவையா?, வழக்கு தொடர்ந்தவர்கள் யார்? யார்?, என்னென்ன பொறுப்பு வகிக்கிறார்கள்?, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டனர். யார், யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை, கருத்தில் கொள்ளத் தேவையும் இல்லை.. இந்த வாரமே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கினை முடிவுக்கு கொண்டு வருவதே தங்களின் விருப்பம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்..

இன்று பட்டியல்
அதன்படி, இன்று மதியம் 2.30 மணிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.. தேர்தல் ஆணையம் தரப்பில் அதிமுகவிற்கு அனுப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கூறிப்பிட்டு அனுப்பப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதை வாங்க மறுத்தது... இப்படி 2 முறை கடிதம் அனுப்பப்பட்டும் எடப்பாடி தரப்பு அதை ஏற்கவில்லை... இப்படிப்பட்ட சூழலில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இந்த வாரமே விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதாக நீதிபதிகள் சொல்லி உள்ளதால், இந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே எகிறுகிறது.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications