அதிமுக பொதுச்செயலாளரான என்னையே நீக்குவதா? சென்னை ஹைகோர்ட்டில் இன்று சசிகலா அப்பீல் மனு மீது விசாரணை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லும் என்ற சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு பிப்ரவரியில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அப்போது டிடிவி தினகரனை, அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக்கினார் சசிகலா. அதாவது அதிமுகவில் தினகரனை மீண்டும் சேர்த்து அதே நாளில் துணைப் பொதுச்செயலாளர் பதவியும் தந்தார் சசிகலா.

சசிகலா நீக்கம்
சசிகலா சிறைவாசம் அனுபவித்த போது 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது தர்மயுத்தத்துக்குப் பின் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ. பன்னீர்செல்வம் இணைந்திருந்தார். அப்பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் பதவிகள் பறிக்கப்பட்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

சிட்டி சிவில் கோர்ட் வழக்கு
இப்பொதுக்குழுவின் முடிவுகளை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதிமுக பொதுச்செயலாளர் பதவி வகித்த தமது ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது; ஆகையால் தம்மை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என சசிகலா தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மனுத் தாக்கல் செய்தனர்.

சசிகலா மனு டிஸ்மிஸ்
சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது சசிகலாவின் மனு தள்ளுபடியானது. இது சசிகலாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஹைகோர்ட்டில் அப்பீல்
இதனைத் தொடர்ந்து சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தமது தரபின் வாதங்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தால் முழுமையாக கேட்கப்படவில்லை. அவ்வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என சசிகலா கூறியிருந்தார்.

ஹைகோர்ட்டில் இன்று விசாரணை
இம்மேல்முறையீட்டு மனுவானது கடந்த 4-ந் தேதி நீதிபதி சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜாராகினார். அதிமுக பொதுச்செயலாளரான தமது ஒப்புதல் இல்லாமல் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
-
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications