என்ன பண்ணுறீங்க? அப்படியே "ஆப்" ஆன அதிமுக தலைகள்.. ஈரோடு கிழக்கில் கப்சிப்.. கண்கள் சிவந்த எடப்பாடி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அடித்து ஆட போகிறது. அதிமுக இந்த தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் நிலைமை தலைகீழாகி உள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே.எஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தும் கூட ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் பணிகளை கவனிக்க முடியாமல் திணறுகிறார்கள் அதிமுகவினர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

திணறும் அதிமுக
கே.எஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தும் கூட ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் பணிகளை கவனிக்க முடியாமல் திணறுகிறார்கள் அதிமுகவினர். தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி. . செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, டுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜின் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.

மாஜிக்கள் குழு
இந்த பட்டியலை கண்டு ஆளும் கட்சியே கூட பிரமித்துப் போனது. அதிமுக அடித்து ஆட போகிறது. அதிமுக இந்த தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றே பலரும் கருதினார்கள். முக்கியமாக இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு உள்ளது. தேர்தலில் வெல்லும் பட்சத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கான ஒற்றை தலைமை ரூட் கிளியர் ஆகும். இதனால் அதிமுக இங்கே தீவிரமாக வேலை செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தல் பணிக்குழுவில் உள்ள கொங்கு மண்டல மாஜிக்கள் தவிர மற்ற மாஜிக்களும் சரி, எம்.எல்.ஏ.க்களும் சரி... தேர்தல் பிரச்சார பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவே இல்லை.

தேர்தல் பணிகள்
கடந்த 3 நாட்களாக வெளிமாவட்டத்தை சேர்ந்த அதிமுக வி.ஐ.பி.நிர்வாகிகள் யாரும் தொகுதியில் இல்லை. இதனால், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் நொந்து போயிருக்கிறார்கள். தேர்தல் செலவினங்களுக்காக தினசரி ஒரு தொகை கொடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லையாம். அதேபோல, தங்குவதற்கான வசதியும் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. தேர்தல் செலவுகளை கவனிக்க முடியாமல் நிர்வாகிகள் சிலர் திணறி வருகிறார்களாம். இதனால் ஏற்பட்ட அதிருப்திகளால் வெளிமாவட்ட நிர்வாகிகள், தங்களின் சொந்த ஊர்களுக்கு கிளம்பிப் போய்விட்டனர்.

ஒருங்கிணைப்பு
அதிமுகவில் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்கிறார்கள் ஈரோடு மாவட்ட ர.ர.க்கள். இது குறித்து எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிமாவட்ட அதிமுகவினரை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு "மணியானவர்களிடம்" கொடுக்கப்பட்டிருந்ததாம். ஆனால் அவர்களோ இதில் சரிவர அக்கறை காட்டவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், அவர்களிடம் எடப்பாடி கடிந்து கொண்டிருக்கிறார். தேர்தல் பணியில் மூன்று சுற்று பிரச்சாரத்தை திமுக கூட்டணி கட்சிகள் முடித்துள்ள நிலையில், அதிமுகவில் இன்னும் முதல் சுற்று பிரச்சாரத்தையே முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications