எம்ஜிஆர் ரசிகர் முதல் அதிமுக அவைத்தலைவர் வரை வடசென்னையின் முகமாக கோலோச்சிய மதுசூதனன்
நடிகராக இருந்த எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய காலம் முதல் அதிமுகவில் வடசென்னையின் மூத்த முகமாக இருந்த மதுசூதனன் இன்று காலமாகி விட்டார்.
சென்னை: எம்ஜிஆர் ரசிகராக இருந்து அதிமுகவின் அவைத்தலைவராக உயர்ந்த மதுசூதனன் வடசென்னையின் முகமாக அரசியலில் பல ஆண்டுகாலம் கோலோச்சி வந்தவர். நடிகராக இருந்த எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய காலம் முதல் அதிமுகவில் வடசென்னையின் மூத்த முகமாக இருந்த மதுசூதனன் உடல்நலக்குறைவினால் இன்று காலமாகிவிட்டார்.
எம்ஜிஆர் காலத்தில் திமுகவின் சைதை கிட்டுவுக்கு போட்டியாக தென்சென்னையில் சைதை துரைசாமி உருவாக்கப்பட்டார். அவரும் எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாகவே இருந்தார். அதன்பின்னர்தான் ஆதிராஜாராம் போன்றவர்கள் தலையெடுத்தனர்.
அதேகாலத்தில் வடசென்னையில் கோலோச்சிக் கொண்டிருந்தார் மதுசூதனன். அதன்பின்னர்தான் பாலகங்கா, சேகர்பாபு, ஜெயக்குமார் என அடுத்தடுத்து பலர் அதிமுகவில் தலையெடுத்தனர்.

தொண்டர் படை
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரு அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா அணிக்கு சென்றார் மதுசூதனன். ஜெயலலிதாவின் அருகில் மன்னார்குடி குடும்பத்தின் திவாகரன், தினகரன் சபாரி போட்டுக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் தொண்டர் பலத்தையும் குண்டர் பலத்தையும் திரட்டுவதற்கு பெரிதும் தேவைப்பட்டவர் வடசென்னை மதுசூதனன்தான்.

முதல்முறை அமைச்சர்
1989 சட்டசபை கலவரத்தின் போது சர்வபரி தியாகத்துக்குமான படையை ஜெயலலிதாவுக்காக சட்டசபை வளாகத்தில் நிறுத்தியவர் மதுசூதனன். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதன் முறையாக முதல்வரான ஜெயலலிதா மதுசூதனனுக்கு பரிசாக கைத்தறி துறை அமைச்சர் பதவியை கொடுத்தார்.

சிபிஐ கைது
ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு சம்பவத்தில் மதுசூதன் பெயரும் அடிப்பட்டது. அத்துடன் மட்டுமல்ல சுர்லாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுசூதனை சிபிஐ கைதும் செய்தது.

அதிமுக அவைத்தலைவர்
அரசியலில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர் மதுசூதனன். ஒரு காலக்கட்டத்தில் ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டு பின்னர் 2007 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியின் அவைத் தலைவராக்கப்பட்டார். மதுசூதனன் உயிரோடு இருக்கும் வரை அவர்தான் அவைத்தலைவர் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா கொடுத்த பதவி
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் மூத்த தலைவர் மதுசூதனன். வயது முதிர்வினால் அவரை ஓய்வெடுக்க சொல்லலாம் என்ற பேச்சு எழுந்த போது, அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது. நான் உயிரோடு இருக்கும் வரை அவைத்தலைவராகத் தான் இருப்பேன் என்று பகிரங்கமாகவே கூறினார்.

அதிமுகவின் உண்மை தொண்டர்
எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்கள் எத்தனையே பேர் கால மாற்றத்தில் பல கட்சிக்கு தாவியிருந்தாலும் அதிமுக தொடங்கியதிலிருந்து மரணம் வரையிலும் அதிமுகவின் உண்மை விசுவாசியாகவும் பல ஆண்டுகாலம் அதிமுகவின் அவைத்தலைவராகவும் இருந்து மறைந்திருக்கிறார் மதுசூதனன்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications