Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எகிறும் எதிர்பார்ப்பு.. அண்ணாமலையை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. திமுகவுக்கு காத்திருக்கும் சவால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் களம் சூடி பிடித்துள்ளது. இந்தச்சூழலில் நாளைய தினம் அதிமுக- பாஜக தலைவர்கள் இடையே முக்கிய மீட்டிங் நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா. இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவர்.

கடந்த 4ஆம் தேதி திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் திடீரென மறைந்ததைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்து 6 மாதங்களில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். சமீபத்தில் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அத்துடன் சேர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 02ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

 ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.. சில காலமாக அமைதியாக இருந்த அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எப்போதுமே இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு ஒரு டெஸ்டாகவே இருக்கும். மக்கள் ஆளும் ஆட்சியின் மீது எந்தளவுக்கு மதிப்பு வைத்துள்ளனர் என்பதை இடைத்தேர்தலில் தெரிந்து கொள்ளலாம்.

 ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

எனவே, ஆளும் தரப்பினர் இடைத்தேர்தலைக் கவுரப் பிரச்சினையாகக் கருதும். அதேபோல எதிர்க்கட்சியும் இதில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும். இடைத்தேர்தலில் ஆளும் தரப்பை வீழ்த்திவிட்டால்.. அதுவே பெரிய பூஸ்டாக அமையும். அடுத்து வரும் தேர்தல்களில் பிராசத்தில் மக்கள் இடைத்தேர்தலிலேயே ஆளும் தரப்பை நிராகரித்துவிட்டனர் என்று கூறி பிரசாரம் செய்யலாம். இதனால் இடைத்தேர்தலை எப்போதும் இரு தரப்பும் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளும். இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியிலும் அதே சூழலே நிலவுகிறது.

 ஜிகே வாசன் பல்டி

ஜிகே வாசன் பல்டி

அங்கு கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சியே திமுக கூட்டணியிலிருந்து களமிறங்குகிறது. அக்கட்சியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்த்தரப்பில் அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் களமிறங்கியது. முதலில் இடைத்தேர்தலில் போட்டியிட ஜி.கே. வாசன் ஆர்வம் காட்டினாலும் பின் திடீரென தனது பல்டி அடித்தார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடச் சம்மதிப்பதாகத் தெரிவித்தார்.

 மீட்டிங்

மீட்டிங்

இது ஒரு பக்கம் இருக்க பாஜகவும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியானது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிக்காக 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக அமைத்தது இந்தப் பேச்சை வலுப்படுத்துவதாகவே அமைந்தது. அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், இரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் பணிகளில் இறங்கியுள்ளது. இருப்பினும், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தல் உள்ளிட்ட பல காரணங்களால் தற்போதைக்கு பாஜக அதிமுகவிடம் இருந்து விலகித் தனித்துப் போட்டியிட வாய்ப்புகள் குறைவு.

 முக்கிய முடிவு?

முக்கிய முடிவு?

இந்தச் சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மூத்த தலைவர்கள் நாளை மாலை கமலாலயம் சென்று பாஜகவிடம் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை நடைபெறும் இந்தச் சந்திப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இரு தரப்பினரும் ஆலோசிக்க உள்ளனர். அதன் பின்னரே இந்த விவகாரத்தில் இரு தரப்புமே இறுதி முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+