அப்படியே கப்பல் மாறும் பெரிய டீம்.. திமுக படகில் ஏறும் அதிமுக தலைகள்.. எடப்பாடி என்ன பண்ணுவாரோ!
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான அதிமுக தலைவர்கள் ஆளும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் கட்சி மாறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய "டீம்" ஒன்று கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
முக்கியமாக சென்னையில் உள்ள பெரிய தலைவர் ஒருவர் கூட விரைவில் திமுகவில் இணைவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்த பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி அதிமுக
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உடன் ஏற்பட்டு உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிமுகவின் உட்கட்சி பூசல்கள் உச்சம் அடைந்துள்ளன. அதோடு தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் கட்சி பலவீனமடைந்துள்ளதாக சில அதிமுக தலைவர்கள் கருதுகின்றனர்.
திமுகவில் இணைவது தங்களுக்கு அதிக அரசியல் பாதுகாப்பையும், தேர்தலுக்கு முன்பாக சிறந்த வாய்ப்புகளையும் வழங்கும் என்று அந்த டீமை சேர்ந்தவர்கள் நம்புகின்றனர். இந்த செய்தி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சில அதிமுக உறுப்பினர்களுக்கும், திமுகவுக்கும் இடையே அதிகரித்து வரும் நெருக்கம் குறித்து பாஜகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீங்கள் திமுக போனால் நடப்பதே வேறு.. அதிமுகவில் இருங்கள்.. பாஜகவுடன் நீங்கள் வைத்துள்ள கூட்டணி வெற்றிபெறும். இல்லையென்றால் சிக்கலை சந்திப்பீர்கள்.. என்று பாஜக கோபம் அடைந்து உள்ளதாம்.
ஆளும் கட்சியை மேலும் பலப்படுத்தும்
தமிழக அரசியலில் இத்தகைய கட்சித் தாவல்கள் புதியவை அல்ல, ஆனால் அதன் நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மாநிலத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் இந்த கட்சி மாற்றங்கள் கவனம் பெறலாம்.
மேலும் அதிமுக தலைவர்கள் திமுகவுக்கு மாற முடிவு செய்தால், அது ஆளும் திமுக கட்சியை மேலும் பலப்படுத்தும்.
அதிமுகவின் அடுத்த புள்ளிக்கு.. தூண்டில் போட்ட திமுக
அதேபோல், அதிமுகவின் மற்றொரு முக்கிய புள்ளி விரைவில் திமுகவில் சேர வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமான நிகழ்வு. வெற்றிபெறக்கூடிய கட்சியிலும், பெரும்பாலும் ஆளுங்கட்சியிலும் இணைவது பொதுவான போக்கு.
திமுக வட்டாரங்கள் தரும் தகவலின்படி, அந்த முக்கியப் புள்ளி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்றும், சிலர் அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
சுமார் 5,000 பேருடன் இணைந்து அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும், இதற்கான இணைப்பு விழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர் மாறும் பட்சத்தில் அதிமுகவின் அடித்தளம் பெரிய அளவில் ஆட்டம் காணும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த நகர்வு அதிமுகவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படலாம். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி மாறுவது தேர்தலுக்கு முன்பு ஒரு பொதுவான நிகழ்வுதான் என்றாலும், இது கட்சிகளின் பலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications