Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெங்கடாசலபதி பேலஸ்".. குறிக்கப்பட்ட தேதி, நேரம்! போடப்படும் விதை! எடப்பாடி கேம்ப்பின் "மாஸ்" பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டம் விரைவில் நடக்க உள்ள நிலையில் கட்சிக்குள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் குஷியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும் பரபரப்பிற்கு இடையில் அதிமுக கூட்டம் நடக்க உள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

என்ன முடிவு?

என்ன முடிவு?

மொத்தம் மூன்று முடிவுகள் இந்த கூட்டத்தில் அதிகாரபூர்வமாக விவாதிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்

1- அவை தலைவரை தேர்வு செய்வது. - இப்போது இருக்கும் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தொடர்ந்து இந்த பதவியில் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

2 - பாஜக - அதிமுக இடையிலான மோதல், கூட்டணியில் என்ன செய்யலாம் என்று பேச உள்ளனர்.

3 - ஆளும் திமுக தரப்பிற்கு எதிராக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

எடப்பாடி கேம்ப் முன்னெடுப்பு

எடப்பாடி கேம்ப் முன்னெடுப்பு

இந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமைக்கு முன்னெடுப்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அப்போது இரட்டை தலைமை இருந்தால் அதிமுகவை பெரிதாக தொண்டர்கள் மதிக்க மாட்டார்கள். இதனால் அதற்கு முன்பே ஒற்றை தலைமையை கொண்டு வர எடப்பாடி கேம்ப் முடிவு செய்துள்ளதாம், உட்கட்சி தேர்தலுக்கு பின் நடக்கும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஆகும் இது.

தேர்வு செய்ய மாட்டார்கள்

தேர்வு செய்ய மாட்டார்கள்

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. அதிமுகவில் நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் பெரும்பாலும் எடப்பாடி ஆதரவாளர்கள்தான் வெற்றிபெற்றனர். அவர்களுக்குத்தான் பல இடங்களில் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. வெற்றிபெற்றவர்களில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமி கேம்பை சேர்ந்தவர்கள் என்று ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.

நிர்வாகிகள் தேர்வு குஷி

நிர்வாகிகள் தேர்வு குஷி

இதனால்தான் அதிமுக கூட்டம் விரைவில் நடக்க உள்ள நிலையில் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் குஷியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கான விதையை எடப்பாடி கேம்ப் நிர்வாகிகள் போடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது எடப்பாடி ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் பேசுகையில்.. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும். அதற்கு எடப்பாடிதான் சரி.

கட்சி தேர்தல்

கட்சி தேர்தல்

மீண்டும் பொதுச்செயலாளர் அல்லது தலைவர் பதவி வேண்டும். அப்போதுதான் கட்சி 2024 லோக்சபா தேர்தலை சந்திக்கும் போது கட்சி வலுவாக இருக்கும், என்று அதிமுக தலைகள் இந்த கூட்டத்தில் தெரிவிக்க இருக்கிறார்களாம். அதிமுகவில் தற்போது பெரும்பாலான நிர்வாகிகள், புதிய நிர்வாகிகள் எடப்பாடி கேம்ப் என்பதால், அவர்களின் குரல்தான் அதிகம் கேட்கும். எடப்பாடிக்கு ஆதரவான சூழ்நிலைதான் கூட்டத்தில் பெரும்பாலும் நிலவும் என்று நிர்வாகிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எம்எல்ஏக்கள் யார் பக்கம்?

எம்எல்ஏக்கள் யார் பக்கம்?

பெரும்பாலும் எம்எல்ஏக்கள் எல்லோரும் எடப்பாடி பக்கம்தான் உள்ளனர். ஒரு சில அதிருப்தி எம்எல்ஏக்களையும் எடப்பாடி எளிதாக சமாளித்துவிடுவார். ஆனால் இப்போது ஒற்றை தலைமை தேர்வு நடக்காது. ஒரு சில மாதங்கள் போகலாம் . அதற்கான விதை, ஆலோசனைகள் கண்டிப்பாக இந்த கூட்டத்தில் நடக்கும் என்கிறார்கள். இதை சமாளிக்க ஓபிஎஸ் தரப்பு கண்டிப்பாக வேறு சில திட்டங்களை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+