ஜெயக்குமாருக்கு ஏமாற்றம்.. விந்தியாவிற்கு பெருத்த ஏமாற்றம்.. கல்தா தந்த எடப்பாடி.. போச்சே!
சென்னை: தமிழ்நாடு மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதிமுக சார்பில் நடிகை விந்தியாவிற்கு இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விந்தியாவிற்கு இடம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு உள்ளார்.
அதிமுகவில் மாநிலங்களவை எம்பி (ராஜ்யசபா எம்பி) தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி இன்று வெளியிட்டார்.
தேமுதிகவுக்கு அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் இடம் வழங்கப்படும். அவர்களுடன் கூட்டணி தொடருகிறது என்று அதிமுக அறிவித்துள்ளது.
வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக நான்கு மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.
திமுக வேட்பாளர்கள்
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட உள்ளனர். 4வது வேட்பாளராக திமுக சார்பில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட தேர்வாகி உள்ளார்.
அதிமுக வாய்ப்பு இல்லை
தமிழ்நாடு மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதிமுக சார்பில் நடிகை விந்தியாவிற்கு இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விந்தியாவிற்கு இடம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு உள்ளார்.
இவருக்கு சீட் வழங்க எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக கூறப்பட்டது. அதாவது இவருக்கு சீட் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட முடிவு எடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் கட்சியில் சில சீனியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர் என்று செய்திகள் வந்தன.
அதே போல் ஜெயக்குமார் எம்பி பதவிக்கு விரும்பினார் என்றும் செய்திகள் வந்தன. அதாவது அவர் பாஜக கூட்டணியை விரும்பவில்லை. ஆனாலும் எடப்பாடி உடன் எல்லாவிதமான சூழ்நிலையிலும் இருந்துள்ளார். அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அப்படி இருக்க அவர் பாஜக கூட்டணி காரணமாக எம்எல்ஏ தேர்தலில் மீண்டும் நிற்க பெரிதாக விரும்பவில்லை.
சென்னையிலும் அதிமுக வீக்காகிவிட்டது. இதனால் சென்னையில் அதிமுகவை வலிமையாக்கும் விதமாக ஜெயக்குமாரை ராஜ்ய சபா எம்பியாக்கும் முடிவை எடப்பாடி எடுப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் பலரும் எதிர்பார்க்காத விதமாக அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி இன்று வெளியிட்டார். அதிமுக கட்சிக்குள் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications