அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்?
சென்னை: நாம் தமிழர் கட்சியில் பிரபலமான பேச்சாளராக இருந்தவர் காளியம்மாள். நாதகவில் இருந்து இவர் விலகிய நிலையில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே 2019, 2024 லோக்சபா தேர்தல்களிலும், 2021 சட்டசபை தேர்தலிலும் நாதக சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர் காளியம்மாள்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர்கள் தேர்வு என விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கட்சி தாவும் படலமும் நடந்து வருகிறது.

காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் காளியம்மாள். இவர் நாதகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வேறு எந்த கட்சியிலும் சேராமல் இணைந்தார். அதே நேரம் தவெக உள்ளிட்ட கட்சிகளிடம் இணைவதற்கு அவரது தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் காளியம்மாள்.
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்தார் காளியம்மாள். நாதக-வில் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்த இவர், தன்னுடைய பேச்சால் பொதுமக்கள் இடையில் பிரபலமடைந்தார். கடந்த 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில், அவர் பேச்சு இணையத்தில் பெரியளவில் வைரலானது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார். சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.
அதிமுகவில் காளியம்மாள்
இதனையடுத்து எந்த கட்சியிலும் இணையாமல் இருந்தார். தொடர்ந்து திமுக, அதிமுக, தவெக கட்சியில் அவர் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் காளியம்மாள் இணைவதற்கு பல முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை தொகுதியில் அவர் அதிமுக சார்பில் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் தலைமை முடிவு செய்யும். எங்களுக்கான உரிமைகளை நாங்கள் கேட்டு இருக்கிறோம். நான் இப்போது அதிமுகவில் இணையவில்லை. 2010 ஆம் ஆண்டிலே பொறுப்பில் இருந்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார் காளியம்மாள்.
காளியம்மாள் முந்தைய ரிசல்ட்
2019 மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியிலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியிலும், 2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர் காளியம்மாள். 2019 மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் நாதக சார்பில் போட்டியிட்ட காளியம்மாள் 60,515 வாக்குகள் அதாவது, 6.33% வாக்குகள் பெற்று 4ஆம் இடம் பிடித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள் 14,823 வாக்குகள் அதாவது 7.16% வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்திருந்தார். 2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள் 1,27,642 வாக்குகள் அதாவது 11.73% சதவீத வாக்குகள் பெற்று 4ஆம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், அதிமுக சார்பில் அவர் வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications