கொதித்து எழுந்த எடப்பாடி.. பள்ளி மாணவி வன்கொடுமையை கண்டித்து கிருஷ்ணகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்!
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்ரவரி 8-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டுக்கு சென்று, அந்த மாணவி ஏன் பள்ளிக்கு வரவில்லை எனக் கேட்டு அறிந்துள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்து கரு கலைப்பு செய்திருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், உடனடியாக மகளிர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதே பள்ளியில் படிக்கும் மூன்று ஆசிரியர்கள் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக போலீசார் இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து மூன்று ஆசிரியர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் என்சிசி பயிற்சி முகாமில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பில் ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கண்டன பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அரசுப் பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல் ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடூரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க. மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்.8 ஆம் தேதி சனிக்கிழமை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக் கிழமை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு!












Click it and Unblock the Notifications