"அவர் பதில் வரட்டும் அதுக்குபின் பேசுறேன்"! எடப்பாடி பற்றி பூடகமாக பேசிய வைத்தி! அதை நோட் பண்ணீங்களா
சென்னை: அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க கோரி ஓ பன்னீர்செல்வம் சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் சார்பாக செய்தியாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்ச்செல்வம் சார்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழு தொடர்பாக எழுதப்பட்ட இந்த கடிதத்தை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஓ பன்னீர் செல்வமின் ஆதரவாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் முன் படித்துக்காட்டினார்கள்.

கடிதத்தில் என்ன உள்ளது?
அந்த கடிதத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் இந்த முறையும் அனுமதி அளிக்க வேண்டும். இடம் இல்லை என்று பேச கூடாது. அதோடு, ஒற்றை தலைமை குறித்து தேவையின்றி பேச கூடாது. அந்த கருத்துக்களால் நிர்வாகிகள் பலர் கொதித்து போய் உள்ளனர்.

விரிசல்
கட்சிக்குள் விரிசலை இது ஏற்படுத்தும். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம். இதை பற்றி கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நாம் இருவரும் இணைந்து முடிவு எடுக்கலாம் என்று ஓ பன்னீர்செல்வம் சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

வைத்தியலிங்கம்
இந்த கடிதத்தை படித்து காட்டிய பிறகு செய்தியாளர்கள் கேள்விக்கு வைத்தியலிங்கம் பதில் அளித்தார். அதில் நீங்கள் பொதுக்குழுவை ஒத்திவைக்க சொல்கிறீர்கள். அதை மீறி நடந்தால் செல்வீர்களா மாட்டீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு வைத்திய லிங்கம் .. கடிதம் அனுப்பி இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்றார்.

எடப்பாடி பதில் சொல்லட்டும்
சூழ்நிலை சரியில்லை என்று சொல்கிறீர்கள்.. பொதுக்குழு ஒருவேளை நடந்தால் டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கும் வைத்திய லிங்கம் .. கடிதம் அனுப்பி இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்று மீண்டும் கூறினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் பொதுக்குழு ஏற்பாடு செய்ய சென்று இருக்கிறார்களே.. அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

ஒரே பதில்
அதற்கு பதில் சொன்ன வைத்தியலிங்கம்.. நாங்கள் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் கட்சி மோதல் வேண்டும், பிளவு படட்டும் என்று சர்வாதிகாரத்தோடு நினைக்கிறார்கள். கடிதம் அனுப்பி இருக்கிறோம் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்று மீண்டும் வைத்தியலிங்கம் கூறினார். கட்சி உடைய கூடாது என்று நாங்கள் உணர்கிறோம். ஆனால் அவர்கள் உணரவில்லை.

கட்சி உடைய கூடாது
இதுவரை பொதுக்குழு குறித்து சட்ட ஆலோசனை பெறவில்லை. இப்போதுதான் கடிதம் அனுப்பி இருக்கிறோம். அதற்கு முதலில் எடப்பாடி பழனிச்சாமி பதில் தரட்டும் அதன்பின் நாங்கள் பதில் அளிக்கிறோம்.. நாளை அவர்கள் பதில் சொன்னதும்.. நாங்கள் சொல்கிறோம்.. என்று வைத்தியலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் பலவற்றுக்கு முதலில் எடப்பாடி இந்த லெட்டருக்கு பதில் சொல்லட்டும் பின் நாங்கள் எங்கள் முடிவை அறிவிக்கிறோம் என்று வைத்தியலிங்கம் பூடகமாக பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications