5 இடங்களில் டெபாசிட் காலி.. கொங்கு மண்டலத்திலும் பெரிய அடிதான்.. எடப்பாடியை மிரள வைத்த கணிப்பு
சென்னை; அண்ணாமலை அடித்து மேலே வந்து கொண்டு இருக்கிறார். வடஇந்திய கருத்து கணிப்புகள் கூட இதைத்தான் சொல்கிறது. ஸ்டாலின் 56 சதவிகிதம் வருவார்கள் என்று சி வோட்டர் கூட சொல்கிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் கூட எடப்பாடி பழனிசாமி அடி வாங்குவார், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் தனியாக கூட்டணி அமைப்போம். 2024, 2026 தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவரின் இந்த முடிவு குறித்து ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேட்டி அளித்துள்ளார்.
( தூக்கி குப்பையில் போடுங்க.. அண்ணாமலைக்கு "ஃபுல் பவர்" தந்த அமித் ஷா.. எடப்பாடிக்கு விழுந்த பெரிய இடி )
பேட்டி: அதில், அண்ணாமலை திமுக கடுமையாக எதிர்க்கிறார். அதிமுகவும் திமுகவை எதிர்க்கிறது. ஆனால் இப்போது அண்ணாமலை செய்யும் அளவிற்கு யாரும் திமுகவை எதிர்க்கவில்லை. அவருக்கு டெல்லி முழு சப்போர்ட் வழங்குகிறது. அவரை டெல்லி கைவிட்டுவிட்டதாக கூறுவது எல்லாம் சுத்த பொய். அதில் உண்மை இல்லை.

அண்ணாமலை அடித்து மேலே வந்து கொண்டு இருக்கிறார். வடஇந்திய கருத்து கணிப்புகள் கூட இதைத்தான் சொல்கிறது. ஸ்டாலின் 56 சதவிகிதம் வருவார்கள் என்று சி வோட்டர் கூட சொல்கிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் கூட எடப்பாடி பழனிசாமி அடி வாங்குவார். ஜாதி வேறுபாடு காரணமாக எடப்பாடி பழனிசாமி அடிவாங்குவார்.
கொங்கு மண்டல அரசியல்: கொங்கு மண்டலத்தில் அதிமுக நாயுடுகள், செங்குந்த முதலியார்கள், மற்ற கவுண்டர்கள் எடப்பாடிக்கு எதிராக திரும்புவார்கள்.இதனால் எடப்பாடி கண்டிப்பாக அடி வாங்குவார். கொங்கு எடப்பாடிக்கு பெரிய சேலஞ்சு. காலில் விழக்கூடிய எடப்பாடி என்ற கவுண்டரா.. நிமிர்ந்து நிற்க கூடிய அண்ணாமலை என்ற கவுண்டரா என்று பார்க்கலாம்.
நாங்கள் சர்வே எடுத்து பார்த்தோம். தென் மண்டலத்தில் 5 இடங்களில் எடப்பாடிக்கு டெபாசிட் காலி. நாங்கள் எடுத்த சர்வேபடி.. எடப்பாடி கண்டிப்பாக டெபாசிட் இழப்பார். இஸ்லாமிய வாக்குகள், முக்குலத்தோர் வாக்குகள், நாம் தமிழர் பிரிக்கும் வாக்குகள், பாஜக பிரிக்கும் வாக்குகளால் டெபாசிட் இழக்கும் நிலையில் எடப்பாடி உள்ளது.

வாக்குகள் சிதறும்: கொங்கு மண்டலத்தில் 30 சதவிகித வாக்குகளை அதிமுக வெல்லும். அங்கு இவருக்கு சாதகமாக இருக்கும். ஆனாலும் பழைய முறை அளவிற்கு சாதகமாக இருக்காது. ஜெயலலிதா இருந்த போது நிலவிய சாதகமான சூழ்நிலை இருக்காது. அங்கே அவருக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் மற்ற ஜாதி வாக்குகள் எடப்பாடிக்கு எதிராக செல்லும்.
அண்ணாமலை இளம் வெள்ளாள கவுண்டர் வாக்குகள் வரும். வடஇந்தியர்கள் வாக்குகள் வரும். கவுடா, நாயக்கர் வாக்குகள் வரும். இதனால் கொங்கு மண்டலத்திலும் எடப்பாடிக்கு எதிராக வாக்குகள் திரும்பும். கள்ள சமூகத்தின் காலில் எடப்பாடி விழுந்தார் என்று கொங்கு மண்டல கவுண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கில் எடப்பாடி மோசமாக தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் இதுதான்.
( 1 மாசம் ஆக போகுது.. ஸ்டாலின் போட்ட போடு.. கடும் டென்ஷனில் எடப்பாடி.. நடுங்கி போன அதிமுக.. ஏன்?)
எடப்பாடி பழனிசாமி சரிவு: கொங்கு மண்டலத்தில் எடப்பாடி தோல்வி அடைவார் என்பதற்கு இதுவே சாட்சி. ஈரோடு கிழக்கில் ஆய்வு செய்து பார்த்ததில் 13 சதவிகித வாக்குகளை பாஜக இழந்து உள்ளது. வடஇந்தியர்கள் பூத்துகளில் பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்து இருக்கிறது. கொங்கு வேளாளர் பகுதிகளில் மட்டுமே எடப்பாடி வாக்குகளை பெற்றுள்ளார். இப்போது அண்ணாமலை எதிராக சென்றுவிட்டார்.
இதனால் அந்த ஜாதியினர் எடப்பாடிக்கு எதிராக செல்வார்கள். இதனால் எடப்பாடிக்கு எதிராக கண்டிப்பாக தேர்தல் திரும்பும். அவரை இந்த முறை கொங்கில் இருக்கும் ஜாதி அமைப்புகள் காப்பாற்றாது.; அண்ணாமலை பக்கம் தேசிய அரசியல், பாஜக, ஜாதி அரசியல் காரணமாக இவர்கள் எல்லாம் ஒன்று கூடுவார்கள், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications