"தூக்குங்க" அவரை.. விட்றாதீங்க 3 பேரையும்.. "துண்டு" போட்டாச்சு.. கூடாரம் காலி? அதிரும் அதிமுக, பாஜக

அதிமுகவில் சில முக்கிய நபர்கள் கொங்கு திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொங்கு திமுக வேகம் எடுத்து வரும் நிலையில், முக்கிய தகவல் ஒன்று அதிமுக கூடாரத்தை வெலவெலக்க வைத்து வருகிறது.

அதிமுக, திமுக, காங்கிரஸ் என்பதெல்லாம் போய், தமிழக பாஜகவுக்குள்ளும் சறுக்கல்களும், சர்ச்சைகளும், பூசல்களும் வெடித்து கிளம்பி உள்ளன..

எப்போதுமே, மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க, பாஜக தீவிரம் காட்டுவது இயல்பான விஷயம்.. ஆனால், சமீபகாலமாக நடந்து வரும் பாஜக பூசல்களினால் நிலைமையே தலைகீழாகி உள்ளது.

டெய்ஸியா

டெய்ஸியா

காயத்ரி ரகுராம், டெய்ஸி போன்ற பெண் நிர்வாகிகளையும், தங்கள் கட்சி பக்கம் இழுக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முயன்று வருவதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன.. அதேசமயம், அதிமுகவின் தற்போதைய சூழல், பாஜக உட்பட அனைத்து கட்சிகளுக்குமே சாதமாகி கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன், சசிகலா தலைமையில் ஒரு அணியும் இயங்கி கொண்டிருக்கின்றன.. பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேரும் மனநிலையில் இருக்காத நிலையில், தொண்டர்களும், நிர்வாகிகளும் பல்வேறு கட்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்...

 வெட்டி வா + கட்டி வா

வெட்டி வா + கட்டி வா

இதில் பிரதானமாக, திமுகவே அறுவடை செய்ய பார்க்கிறது.. கடந்த தேர்தலில், திமுக ஜஸ்ட் பாஸ் வெற்றியை பெற்றதற்கு காரணமே கொங்கு திமுகவின் சறுக்கல்கள்தான்.. எனவே, கொங்குவை பலப்படுத்துவதற்காகவே, மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திமுக பக்கம் கொண்டுவரும் முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே அமைச்சர் செந்தில்பாலாஜி இறக்கிவிடப்பட்டுள்ளார்.. அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.. பாஜக மகளிர் அணி உட்பட, அதிமுகவின் முக்கிய புள்ளிகளும் திமுகவில் இணைந்து வருவது, இரு கட்சிகளுக்குமே எரிச்சலை தந்து வருகின்றன..

புதுஸ்ஸா டீம்

புதுஸ்ஸா டீம்

அதிமுக மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டபோது, மேலும் சிலர் திமுக பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அந்தவகையில், சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. இப்போது விஷயம் என்னவென்றால், கோவை செல்வராஜுக்கு திமுக மேலிடம் முக்கியமான 'அசைன்மென்ட் ஒன்றை தந்துள்ளதாம்..

 அசைண்மெண்ட்

அசைண்மெண்ட்

ஓபிஎஸ் டீமில் இவரை போலவே அதிருப்தியில இருக்கும் மாவட்ட அளவிலான தலைவர்களை, திமுக பக்கம் கொண்டு வர சொல்லி கூறியுள்ளதாம். அதேபோல, எடப்பாடி பழனிசாமி டீம் பக்கம், அதிருப்தியாளர்கள் வேறு யாரும் அணி தாவுறதுக்கு முன்னாடியே, திமுகவுக்கு கொண்டுவர வேண்டும் என்று திமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கும் தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம். முக்கியமாக ஓபிஎஸ் கூடாரத்தை திமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்த உத்தரவாக பறந்துள்ளது.. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், 3 மாவட்ட செயலாளர்கள், 3,000 தொண்டர்களுடன் இன்னும் 15 நாட்களில் திமுக பக்கம் வர போகிறார்களாம்..

 கூடாரம் காலி

கூடாரம் காலி

வெட்டி வா என்றால் கட்டி வரும் அந்த அமைச்சரும், இன்னொரு மாஜி சீனியர் எம்எல்ஏவும் இதற்கெல்லாம் காரணமாக இருந்து வருகிறார்கள்.. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான், ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் வலியுறுத்தி வருகிறது.. ஆனால், இப்படி பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவை விட்டு வெளியேறுவது குறித்து, எடப்பாடி பழனிசாமிக்கோ, ஓபிஎஸ்ஸுக்கோ கவலையே இல்லை என்று தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.. அதிலும், எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் தகர்வதற்குள், அதிமுகவின் பாதி கூடாரம் காலியாகிவிடுமோ? என்று கலகலத்து போயிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்..!!

அச்சாரம்

அச்சாரம்

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "கூட்டணியில் புதிதாக மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது என்பதுடன், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாஜகதான் தலைமை என்று பொன்.ராதாகிருஷ்ணன் 2 முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளார். தற்சமயம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் விவகாரங்களால், அதிமுக ஆட்டம் கண்டுள்ள நிலையில், கூட்டணி தலைமை என்று பாஜக சொல்லி உள்ளது.. அத்துடன், மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளதாக சொல்லி உள்ளது, அதிமுகவின் மைனஸ் ஆகவே பார்க்கப்பட்டு வருகிறது.. ஒருங்கிணைந்த அதிமுக இல்லாவிட்டால், கட்சி மேலும் கரையவே நிறைய வாய்ப்புள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துசொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+