அப்பாவின் மரணம்.. உடைந்து போன அஜீத்..அரசியல் தலைவர்கள் இரங்கல்..உதயநிதி நேரில் அஞ்சலி
சென்னை: பிரபல திரைப்பட நடிகர் அஜீத்குமாரின் தந்தை உடல் நலக்குறைவினால் காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஜீத் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
தந்தையை இழந்து வாடும் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, வி.கே. சசிகலா ஆகியோர் அஜீத் தந்தை மறைவுக்கு தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டு அஜீத் குமாருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை
திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என்று பதிவிட்டுள்ளார்.

சசிகலா ட்வீட்
பிரபல நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தந்தையின் மறைவு அஜித் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.தனது தந்தையை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.

இறைவன் திருவடி நிழல்
தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications