ஃபிளைட்டில் ஒருத்தர் மட்டும் உயிர் தப்பினாரே எப்படி? ஏர் இந்தியா விமானத்தின் கதவை திறந்தது இவர்தானா?
சென்னை: விமானத்திலிருந்து உயிர் தப்பிய விஸ்வகுமார் சொல்லும் காரணமும் பதிலும் நம்பற மாதிரி இல்லையே என்று சோசியல் மீடியாவில் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள்.. மேலும் சிலர், அந்த எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறந்ததே விஸ்வகுமார்தானோ? அதனால்தான், வெளியிலிருந்த காற்று முழுவதுமே உள்ளே நுழைந்துவிட்டதால்தான் விமானம் விபத்துக்குள்ளானதோ? என்றும் சொல்கிறார்கள். இவையாவும் சரியான விமர்சனம் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
cheyyar Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "அகமதாபாத் விமான விபத்தில் ஒருபக்கம் பாசிடிவ்வாகவும், மறுபக்கம் நெகட்டிவ்வாகவும் பேசப்பட்டு வருவது, விமானத்திலிருந்து எகிறி குதித்து உயிர் தப்பிய விஸ்வகுமார் என்பவரை பற்றிதான்.

இந்திய வம்சாவளியான, லண்டனை சேர்ந்த அவர், தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்காக, தன் அண்ணனுடன் அகமதாபாத் வந்திருக்கிறார். மீண்டும் திரும்பி செல்லும்போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் வெடித்து சிதறிவிட்டது. எப்படி ஒருவரால் தப்பிக்க முடியும்? முகத்தில் மட்டும் சின்ன காயம் இருக்கிறதே எப்படி?
டாம்குருஸ் வாரிசா
டாம்குரூஸ் படத்தில்தான் இப்படியெல்லாம் நபர்களை பார்த்திருக்கிறோம்.. இவர் டாம்குரூஸையே மிஞ்சிட்டாரே? என்று கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் வலம் வருகின்றன..
நடிகை கஸ்தூரிகூட இதுகுறித்து சொல்லும்போது, ஒரு நபர் தப்பித்து இருக்கிறார் என்றால் அது கடவுளின் அருள், பிரபஞ்சத்தின் புண்ணியம் என்றுகூட சொல்லலாம், ஆனால் எப்படி அந்த நபர்மீது குற்றச்சாட்டை வைக்கலாம்?என்று கேட்டிருந்தார். ஆனாலும், உயிர் தப்பிய பயணி குறித்து நிறைய கேள்விகளை சோஷியல் மீடியாவில் பலரும் எழுப்பி வருகிறார்கள்.
எப்படி தப்பினார்
இந்த விமான விபத்துக்கு பிறகு, பலரும் விமானத்தில் பயணம் செய்ய பயப்படுகிறார்கள்.. உயிர் தப்பிய பயணி விஸ்வகுமாரின் அண்ணனின் சடலம், டிஎன்ஏ வைத்து கண்டறியப்பட்டது.. அந்த இறுதிச்சடங்கிலும் விஸ்வகுமார் கலந்து கொண்டார்.
எப்படி விமான விபத்திலிருந்து தப்பினீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எமர்ஜென்சி எக்ஸிட் அருகில் 11A என்ற சீட்டில் உட்கார்ந்திருந்தேன்.. விமானம் விபத்துக்குள்ளாக போகிறது என்று பைலட் அறிவித்த ஒருசில நொடிகளிலேயே, நான் சீட் பெல்ட்டை கழட்டினேன்.. அது இரண்டாக உடைந்துவிட்டது, பிறகு ஒரு மணல் திட்டில் குதித்துவிட்டேன் என்று விஸ்வகுமார் பதிலளித்துள்ளார்.
எமர்ஜென்ஸி எக்ஸிட்
இந்த பதிலும் நம்பற மாதிரி இல்லையே என்று சோசியல் மீடியாவில் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள்.. மேலும் சிலர், அந்த எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறந்ததே விஸ்வகுமார்தானோ? அதனால்தான், வெளியிலிருந்த காற்று முழுவதுமே உள்ளே நுழைந்துவிட்டதால்தான் விமானம் விபத்துக்குள்ளானது என்றும் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
அதேபோல, விமானம் ஒருபக்கத்தில் விபத்தில் தீப்பிடித்து எரியும்போது, விஸ்வகுமார் மருத்துவ கல்லூரி விடுதியின் வேறொரு பக்கத்திலிருந்து, முதல் தளத்திலிருந்து கேஷூவலாக நடந்து வருகிறார், ஆனால், அந்த வீடியோ புட்டேஜ்ஜை மறைக்க என்ன காரணம்? என்றும் கேள்விகள் வலம் வருகின்றன..
அதுமட்டுமல்ல, அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் எல்லாருமே பெரிய தொழிலதிபர்கள், முன்னாள் முதல்வர், குறிப்பாக பிரிட்டனை சேர்ந்த 50 பேர் இருந்திருக்கிறார்கள்..
மாஃபியா கும்பல் தலைவன்
சினிமாவில் ஒரு மாபியா கும்பல் தலைவரை ஒழிக்க வேண்டுமானால், அவரை சுற்றியிருப்பவர்களையும் சேர்த்து அழிப்பார்கள்.. அப்படிகூட இந்த விமான விபத்து நடந்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் இந்த விபத்தில் நிலவுகிறது..
இந்த விமானத்துக்கு 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளே போதுமானது. ஆனால், எதுக்காக 1 லட்சம் வெள்ளை பெட்ரோலை நிரப்பினார்கள்? என்றும் அடுத்த கேள்வி எழுந்துள்ளது..
இப்போது கருப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளனர்.. ஆனால், பார்ப்பதற்கு ஆரஞ்சு பெட்டி போலதான் இருக்கும்.. கடலில் விழுந்தாலோ, காட்டில் விழுந்தாலோ எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்பதற்காக ஆரஞ்சு கலரில் அந்த பெட்டி வடிவமைக்கப்படுகிறது.
இறக்கை ஏன் விரியல
இறக்கை 2 பக்கமும் ஏன் வேலை செய்யவில்லை? அப்படியானால் கலப்பட பெட்ரோல் பயன்படுத்தியதால்தான், இறக்கை விரியவில்லையா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்..
ஒருவித பீதியுடன்தான் பயணித்து வருகிறார்கள்.. அதேபோல, ஏர் இந்தியா நிறுவனம், டாடாவிடம் சென்றபிறகுதான் இப்படியான விபத்துகள் நடப்பதாக மற்றொரு விமர்சனமும் கிளம்பி வருகிறது.
தவறான விமர்சனங்கள்
இந்த விபத்துக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.. எனினும்,. சொந்த சகோதரன் விமானத்தில் இருக்கும்போது, கதவை திறந்து விபத்தை ஏற்படுத்தியிருக்க யாருக்கு மனம் வரும்? தனிநபர் விமர்சனங்கள் வைக்கப்படுவது சரியல்ல.. ஒருவேளை இது சதியென்றால் அதையெல்லாம் நம் போலீசார் எப்போதோ கண்டுபிடித்திருப்பார்கள். உயிர் பிழைக்க பல காரணங்கள் இருந்திருக்கலாம்..
விமான விபத்து அதிர்ச்சியிலிருந்து விஸ்வகுமார் இன்னும் மீளவில்லை.. எனவே அவருக்கு மனரீதியான சிகிச்சை தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications